|
يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ الۡمَلِكِ الۡقُدُّوۡسِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِ
﴿62:1﴾
هُوَ الَّذِىۡ بَعَثَ فِى الۡاُمِّيّٖنَ رَسُوۡلًا مِّنۡهُمۡ يَتۡلُوۡا عَلَيۡهِمۡ اٰيٰتِهٖ وَيُزَكِّيۡهِمۡ وَيُعَلِّمُهُمُ الۡكِتٰبَ وَالۡحِكۡمَةَ وَاِنۡ كَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍۙ
﴿62:2﴾
وَّاٰخَرِيۡنَ مِنۡهُمۡ لَمَّا يَلۡحَقُوۡا بِهِمۡؕ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ
﴿62:3﴾
ذٰ لِكَ فَضۡلُ اللّٰهِ يُؤۡتِيۡهِ مَنۡ يَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الۡفَضۡلِ الۡعَظِيۡمِ
﴿62:4﴾
مَثَلُ الَّذِيۡنَ حُمِّلُوا التَّوۡرٰٮةَ ثُمَّ لَمۡ يَحۡمِلُوۡهَا كَمَثَلِ الۡحِمَارِ يَحۡمِلُ اَسۡفَارًا ؕ بِئۡسَ مَثَلُ الۡقَوۡمِ الَّذِيۡنَ كَذَّبُوۡا بِاٰيٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَ
﴿62:5﴾
قُلۡ يٰۤاَيُّهَا الَّذِيۡنَ هَادُوۡۤا اِنۡ زَعَمۡتُمۡ اَنَّكُمۡ اَوۡلِيَآءُ لِلّٰهِ مِنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ
﴿62:6﴾
وَلَا يَتَمَنَّوۡنَهٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتۡ اَيۡدِيۡهِمۡؕ وَاللّٰهُ عَلِيۡمٌۢ بِالظّٰلِمِيۡنَ
﴿62:7﴾
قُلۡ اِنَّ الۡمَوۡتَ الَّذِىۡ تَفِرُّوۡنَ مِنۡهُ فَاِنَّهٗ مُلٰقِيۡكُمۡ ثُمَّ تُرَدُّوۡنَ اِلٰى عٰلِمِ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
﴿62:8﴾
62:1 அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
62:2 அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
62:3 இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
62:4 இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.
62:5 எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
62:6 (இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!”
62:7 ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான்.
62:8 (இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.”
| |