|
سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِۚ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ
﴿59:1﴾
هُوَ الَّذِىۡۤ اَخۡرَجَ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ مِنۡ دِيَارِهِمۡ لِاَوَّلِ الۡحَشۡرِؔؕ مَا ظَنَنۡـتُمۡ اَنۡ يَّخۡرُجُوۡا وَظَنُّوۡۤا اَنَّهُمۡ مَّانِعَتُهُمۡ حُصُوۡنُهُمۡ مِّنَ اللّٰهِ فَاَتٰٮهُمُ اللّٰهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُوۡا وَقَذَفَ فِىۡ قُلُوۡبِهِمُ الرُّعۡبَ يُخۡرِبُوۡنَ بُيُوۡتَهُمۡ بِاَيۡدِيۡهِمۡ وَاَيۡدِى الۡمُؤۡمِنِيۡنَ فَاعۡتَبِـرُوۡا يٰۤاُولِى الۡاَبۡصَارِ
﴿59:2﴾
وَلَوۡلَاۤ اَنۡ كَتَبَ اللّٰهُ عَلَيۡهِمُ الۡجَـلَاۤءَ لَعَذَّبَهُمۡ فِى الدُّنۡيَاؕ وَلَهُمۡ فِى الۡاٰخِرَةِ عَذَابُ النَّارِ
﴿59:3﴾
ذٰ لِكَ بِاَنَّهُمۡ شَآقُّوا اللّٰهَ وَرَسُوۡلَهٗ ۚ وَمَنۡ يُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِيۡدُ الۡعِقَابِ
﴿59:4﴾
مَا قَطَعۡتُمۡ مِّنۡ لِّيۡنَةٍ اَوۡ تَرَكۡتُمُوۡهَا قَآئِمَةً عَلٰٓى اُصُوۡلِهَا فَبِاِذۡنِ اللّٰهِ وَلِيُخۡزِىَ الۡفٰسِقِيۡنَ
﴿59:5﴾
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوۡلِهٖ مِنۡهُمۡ فَمَاۤ اَوۡجَفۡتُمۡ عَلَيۡهِ مِنۡ خَيۡلٍ وَّلَا رِكَابٍ وَّلٰڪِنَّ اللّٰهَ يُسَلِّطُ رُسُلَهٗ عَلٰى مَنۡ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ
﴿59:6﴾
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوۡلِهٖ مِنۡ اَهۡلِ الۡقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوۡلِ وَلِذِى الۡقُرۡبٰى وَالۡيَتٰمٰى وَالۡمَسٰكِيۡنِ وَابۡنِ السَّبِيۡلِۙ كَىۡ لَا يَكُوۡنَ دُوۡلَةًۢ بَيۡنَ الۡاَغۡنِيَآءِ مِنۡكُمۡ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوۡلُ فَخُذُوْهُ وَ مَا َنَهٰٮكُمۡ عَنۡهُ فَانْتَهُوۡا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيۡدُ الۡعِقَابِۘ
﴿59:7﴾
لِلۡفُقَرَآءِ الۡمُهٰجِرِيۡنَ الَّذِيۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِيَارِهِمۡ وَاَمۡوَالِهِمۡ يَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنَ اللّٰهِ وَرِضۡوَانًا وَّيَنۡصُرُوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗؕ اُولٰٓـئِكَ هُمُ الصّٰدِقُوۡنَۚ
﴿59:8﴾
وَالَّذِيۡنَ تَبَوَّؤُ الدَّارَ وَالۡاِيۡمَانَ مِنۡ قَبۡلِهِمۡ يُحِبُّوۡنَ مَنۡ هَاجَرَ اِلَيۡهِمۡ وَلَا يَجِدُوۡنَ فِىۡ صُدُوۡرِهِمۡ حَاجَةً مِّمَّاۤ اُوۡتُوۡا وَيُـؤۡثِرُوۡنَ عَلٰٓى اَنۡفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٌ ؕ وَمَنۡ يُّوۡقَ شُحَّ نَـفۡسِهٖ فَاُولٰٓـئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَۚ
﴿59:9﴾
وَالَّذِيۡنَ جَآءُوۡ مِنۡۢ بَعۡدِهِمۡ يَقُوۡلُوۡنَ رَبَّنَا اغۡفِرۡ لَـنَا وَلِاِخۡوَانِنَا الَّذِيۡنَ سَبَقُوۡنَا بِالۡاِيۡمَانِ وَلَا تَجۡعَلۡ فِىۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِيۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوۡفٌ رَّحِيۡمٌ
﴿59:10﴾
59:1 வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி செய்து கொண்டிருக்கிறது. மேலும், அவனே யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
59:2 அவனே வேதம் வழங்கப்பட்டவர்களில் நிராகரிப்பாளர்களாய் இருந்தவர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான். அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தங்களின் கோட்டைகள், அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றிவிடும் என்று அவர்களும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திராத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்கள் மீது வந்தான். அவன் அவர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விட்டான். (பிறகு ஏற்பட்ட விளைவு இதுவே:) அவர்கள் தங்களுடைய கைகளைக் கொண்டே தங்களின் இல்லங்களை அழித்துக் கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் கைகளைக் கொண்டும் அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, பார்க்கும் கண்கள் உடையீர் படிப்பினை பெறுவீர்.
59:3 அல்லாஹ் அவர்கள் மீது நாடுகடத்தலை விதித்திராவிடில் உலகிலேயே அவர்களுக்கு வேதனை அளித்திருப்பான். மறுமையிலோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கவே செய்கிறது.
59:4 இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்ததுதான். மேலும், அல்லாஹ்வை யார் எதிர்ப்பினும் திண்ணமாக, அல்லாஹ் (அவர்களுக்குத்) தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
59:5 நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்.)
59:6 மேலும், அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து, தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும், ஒட்டகங்களையும் நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிட்டியதல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடுபவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
59:7 ஊர்வாசிகளிடமிருந்து தன் தூதரின் பக்கம் அல்லாஹ் திருப்பியவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் சேரக்கூடியவை ஆகும். ஏனெனில் அது உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக! இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான்.
59:8 (மேலும், அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்*களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது உவப்பையும் விரும்புகின்றார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கின்றார்கள். இவர்களே, வாய்மையுள்ள மக்களாவர். மேலும் (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத்* செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானதே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை.
59:9 மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
59:10 மேலும், இந்த முன்னோடிகளுக்குப் பிறகு வருகின்ற மக்களுக்கு (உரியதாகும் அந்தச் செல்வம்!) அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களைவிட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் அதிபதியே! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்!”
| |