|
اَلرَّحۡمٰنُۙ ﴿55:1﴾
عَلَّمَ الۡقُرۡاٰنَؕ ﴿55:2﴾
خَلَقَ الۡاِنۡسَانَۙ ﴿55:3﴾
عَلَّمَهُ الۡبَيَانَ ﴿55:4﴾
اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ ﴿55:5﴾
وَّالنَّجۡمُ وَالشَّجَرُ يَسۡجُدٰنِ ﴿55:6﴾
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الۡمِيۡزَانَۙ ﴿55:7﴾
اَلَّا تَطۡغَوۡا فِى الۡمِيۡزَانِ ﴿55:8﴾
وَاَقِيۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِيۡزَانَ
﴿55:9﴾
وَالۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِۙ ﴿55:10﴾
فِيۡهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَكۡمَامِ ۖ
﴿55:11﴾
وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّيۡحَانُۚ ﴿55:12﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:13﴾
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ كَالۡفَخَّارِۙ
﴿55:14﴾
وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍۚ ﴿55:15﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:16﴾
رَبُّ الۡمَشۡرِقَيۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَيۡنِۚ ﴿55:17﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:18﴾
مَرَجَ الۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيٰنِۙ ﴿55:19﴾
بَيۡنَهُمَا بَرۡزَخٌ لَّا يَبۡغِيٰنِۚ ﴿55:20﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:21﴾
يَخۡرُجُ مِنۡهُمَا اللُّـؤۡلُـؤُ وَالۡمَرۡجَانُۚ
﴿55:22﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:23﴾
وَلَهُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِى الۡبَحۡرِ كَالۡاَعۡلَامِۚ
﴿55:24﴾
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿55:25﴾
55:1 அளவிலாக் கருணையுள்ள (இறை)வன்
55:2 இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்.
55:3 அவனே மனிதனைப் படைத்தான்;
55:4 அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான்.
55:5 சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன.
55:6 மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன.
55:7 அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான்,
55:8 நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக!
55:9 மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!
55:10 பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான்.
55:11 அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.
55:12 விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு.
55:13 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:14 ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான்.
55:15 மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான்.
55:16 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:17 இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே!
55:18 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:19 அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்;
55:20 ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.
55:21 ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:22 இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன.
55:23 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
55:24 மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன.
55:25 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
| |