|
اِقۡتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الۡقَمَرُ ﴿54:1﴾
وَاِنۡ يَّرَوۡا اٰيَةً يُّعۡرِضُوۡا وَيَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ
﴿54:2﴾
وَكَذَّبُوۡا وَاتَّبَعُوۡۤا اَهۡوَآءَهُمۡ وَكُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ
﴿54:3﴾
وَلَقَدۡ جَآءَهُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِيۡهِ مُزۡدَجَرٌۙ
﴿54:4﴾
حِكۡمَةٌ ۢ بَالِغَةٌ فَمَا تُغۡنِ النُّذُرُۙ ﴿54:5﴾
فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ الدَّاعِ اِلٰى شَىۡءٍ نُّكُرٍۙ
﴿54:6﴾
خُشَّعًا اَبۡصَارُهُمۡ يَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ كَاَنَّهُمۡ جَرَادٌ مُّنۡتَشِرٌۙ
﴿54:7﴾
مُّهۡطِعِيۡنَ اِلَى الدَّاعِؕ يَقُوۡلُ الۡكٰفِرُوۡنَ هٰذَا يَوۡمٌ عَسِرٌ
﴿54:8﴾
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ فَكَذَّبُوۡا عَبۡدَنَا وَقَالُوۡا مَجۡنُوۡنٌ وَّازۡدُجِرَ
﴿54:9﴾
فَدَعَا رَبَّهٗۤ اَنِّىۡ مَغۡلُوۡبٌ فَانْـتَصِرۡ ﴿54:10﴾
فَفَتَحۡنَاۤ اَبۡوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنۡهَمِرٍ ۖ
﴿54:11﴾
وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُيُوۡنًا فَالۡتَقَى الۡمَآءُ عَلٰٓى اَمۡرٍ قَدۡ قُدِرَۚ
﴿54:12﴾
وَحَمَلۡنٰهُ عَلٰى ذَاتِ اَلۡوَاحٍ وَّدُسُرٍۙ ﴿54:13﴾
تَجۡرِىۡ بِاَعۡيُنِنَاۚ جَزَآءً لِّمَنۡ كَانَ كُفِرَ
﴿54:14﴾
وَلَقَدْ تَّرَكۡنٰهَاۤ اٰيَةً فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ
﴿54:15﴾
فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ﴿54:16﴾
وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ
﴿54:17﴾
كَذَّبَتۡ عَادٌ فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ
﴿54:18﴾
اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيۡحًا صَرۡصَرًا فِىۡ يَوۡمِ نَحۡسٍ مُّسۡتَمِرٍّۙ
﴿54:19﴾
تَنۡزِعُ النَّاسَۙ كَاَنَّهُمۡ اَعۡجَازُ نَخۡلٍ مُّنۡقَعِرٍ
﴿54:20﴾
فَكَيۡفَ كَانَ عَذَابِىۡ وَنُذُرِ ﴿54:21﴾
وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ
﴿54:22﴾
54:1 மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது.
54:2 ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக் கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள்.
54:3 இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும்.
54:4 மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;
54:5 மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை.
54:6 எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்;
54:7 மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல்
54:8 அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”
54:9 இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
54:10 இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”
54:11 அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம்.
54:12 மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது.
54:13 மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம்.
54:14 அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!
54:15 அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
54:16 பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:17 நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
54:18 ‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:19 நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம்.
54:20 அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள்.
54:21 பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
54:22 நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
| |