|
وَالنَّجۡمِ اِذَا هَوٰىۙ ﴿53:1﴾
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوٰىۚ ﴿53:2﴾
وَمَا يَنۡطِقُ عَنِ الۡهَوٰىؕ ﴿53:3﴾
اِنۡ هُوَ اِلَّا وَحۡىٌ يُّوۡحٰىۙ ﴿53:4﴾
عَلَّمَهٗ شَدِيۡدُ الۡقُوٰىۙ ﴿53:5﴾
ذُوۡ مِرَّةٍؕ فَاسۡتَوٰىۙ ﴿53:6﴾
وَهُوَ بِالۡاُفُقِ الۡاَعۡلٰى ؕ ﴿53:7﴾
ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ ﴿53:8﴾
فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ اَوۡ اَدۡنٰىۚ ﴿53:9﴾
فَاَوۡحٰۤى الٰى عَبۡدِهٖ مَاۤ اَوۡحٰىؕ ﴿53:10﴾
مَا كَذَبَ الۡفُؤَادُ مَا رَاٰى ﴿53:11﴾
اَفَتُمٰرُوۡنَهٗ عَلٰى مَا يَرٰى ﴿53:12﴾
وَلَقَدۡ رَاٰهُ نَزۡلَةً اُخۡرٰىۙ ﴿53:13﴾
عِنۡدَ سِدۡرَةِ الۡمُنۡتَهٰى ﴿53:14﴾
عِنۡدَهَا جَنَّةُ الۡمَاۡوٰىؕ ﴿53:15﴾
اِذۡ يَغۡشَى السِّدۡرَةَ مَا يَغۡشٰىۙ ﴿53:16﴾
مَا زَاغَ الۡبَصَرُ وَمَا طَغٰى ﴿53:17﴾
لَقَدۡ رَاٰى مِنۡ اٰيٰتِ رَبِّهِ الۡكُبۡرٰى ﴿53:18﴾
اَفَرَءَيۡتُمُ اللّٰتَ وَالۡعُزّٰىۙ ﴿53:19﴾
وَمَنٰوةَ الثَّالِثَةَ الۡاُخۡرٰى ﴿53:20﴾
اَلَـكُمُ الذَّكَرُ وَلَهُ الۡاُنۡثٰى ﴿53:21﴾
تِلۡكَ اِذًا قِسۡمَةٌ ضِيۡزٰى ﴿53:22﴾
اِنۡ هِىَ اِلَّاۤ اَسۡمَآءٌ سَمَّيۡتُمُوۡهَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُكُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰهُ بِهَا مِنۡ سُلۡطٰنٍؕ اِنۡ يَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهۡوَى الۡاَنۡفُسُۚ وَلَقَدۡ جَآءَهُمۡ مِّنۡ رَّبِّهِمُ الۡهُدٰىؕ
﴿53:23﴾
اَمۡ لِلۡاِنۡسَانِ مَا تَمَنّٰى ۖ ﴿53:24﴾
فَلِلّٰهِ الۡاٰخِرَةُ وَالۡاُوۡلٰى ﴿53:25﴾
53:1 தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது!
53:2 உங்களின் தோழர் வழிதவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை!
53:3 மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை.
53:4 இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும்.
53:5 மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
53:6 அவர் எதிரே வந்து நின்றார் ;
53:7 உயர்ந்த வானத்தின் கீழ் விளிம்பிலிருந்தபோது!
53:8 பிறகு, இன்னும் நெருங்கி வந்து அந்தரத்தில் நின்றார்.
53:9 எந்த அளவுக்கெனில், இரண்டு வில்லுக்குச் சமமான அல்லது அதைவிடக் குறைவான இடைவெளியே இருந்தது.
53:10 அப்போது அவர் அல்லாஹ்வின் அடியாருக்கு அறிவிக்கவேண்டிய வஹியை அறிவித்தார்.
53:11 (தம்முடைய) கண்கள் கண்டதைப்பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை.
53:12 எதனை அவர் கண்களால் பார்க்கின்றாரோ அதனைப்பற்றி நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?
53:13 மற்றொரு முறை அவர் அவரை இறங்கிடக் கண்டார்,
53:14 ‘ஸித்றதுல் முன்தஹா’* அருகில்;
53:15 அதன் அருகிலேயே ‘ஜன்னத்துல் மஃவா’ இருக்கிறது.
53:16 அந்த நேரத்தில் ‘ஸித்றதுல் முன்தஹா’ எது மூடிக்கொண்டிருந்ததோ அது மூடிக் கொண்டிருந்தது.
53:17 பார்வை விலகிவிடவுமில்லை; எல்லை கடந்துவிடவுமில்லை.
53:18 மேலும், அவர்தம் இறைவனின் பெரும் பெரும் சான்றுகளைக் கண்டார்.
53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ;
53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?
53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா?
53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்!
53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.
53:24 மனிதன் எதை விரும்புகின்றானோ அதுவே அவனுக்கு சத்தியம் (ஹக்) ஆகிவிடுமா என்ன?
53:25 இம்மைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான்.
| |