|
وَالذّٰرِيٰتِ ذَرۡوًا ۙ ﴿51:1﴾
فَالۡحٰمِلٰتِ وِقۡرًا ۙ ﴿51:2﴾
فَالۡجٰرِيٰتِ يُسۡرًا ۙ ﴿51:3﴾
فَالۡمُقَسِّمٰتِ اَمۡرًا ۙ ﴿51:4﴾
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَصَادِقٌ ۙ ﴿51:5﴾
وَّاِنَّ الدِّيۡنَ لوَاقِعٌ ؕ ﴿51:6﴾
وَالسَّمَآءِ ذَاتِ الۡحُـبُكِ ۙ ﴿51:7﴾
اِنَّـكُمۡ لَفِىۡ قَوۡلٍ مُّخۡتَلِفٍ ۙ ﴿51:8﴾
يُّـؤۡفَكُ عَنۡهُ مَنۡ اُفِكَ ؕ ﴿51:9﴾
قُتِلَ الۡخَـرّٰصُوۡنَۙ ﴿51:10﴾
الَّذِيۡنَ هُمۡ فِىۡ غَمۡرَةٍ سَاهُوۡنَۙ ﴿51:11﴾
يَسۡـئَـلُوۡنَ اَيَّانَ يَوۡمُ الدِّيۡنِؕ ﴿51:12﴾
يَوۡمَ هُمۡ عَلَى النَّارِ يُفۡتَنُوۡنَ ﴿51:13﴾
ذُوۡقُوۡا فِتۡنَتَكُمۡؕ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تَسۡتَعۡجِلُوۡنَ
﴿51:14﴾
اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ ﴿51:15﴾
اٰخِذِيۡنَ مَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡؕ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُحۡسِنِيۡنَؕ
﴿51:16﴾
كَانُوۡا قَلِيۡلًا مِّنَ الَّيۡلِ مَا يَهۡجَعُوۡنَ
﴿51:17﴾
وَبِالۡاَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُوۡنَ ﴿51:18﴾
وَفِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ
﴿51:19﴾
وَفِى الۡاَرۡضِ اٰيٰتٌ لِّلۡمُوۡقِنِيۡنَۙ ﴿51:20﴾
وَفِىۡۤ اَنۡفُسِكُمۡؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿51:21﴾
وَفِى السَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوۡعَدُوۡنَ ﴿51:22﴾
فَوَرَبِّ السَّمَآءِ وَالۡاَرۡضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثۡلَ مَاۤ اَنَّكُمۡ تَنۡطِقُوۡنَ
﴿51:23﴾
51:1 புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
51:2 நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய,
51:3 மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய,
51:4 பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக!
51:5 எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே!
51:6 மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!
51:7 பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
51:8 (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது.
51:9 எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான்.
51:10 அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்!
51:11 அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள்.
51:12 “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர்.
51:13 இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.
51:14 (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.”
51:15 இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:16 அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
51:17 இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
51:18 பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
51:19 மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!
51:20 உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.
51:21 ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?
51:22 வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!
51:23 வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
| |