|
اِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحًا مُّبِيۡنًا ۙ ﴿48:1﴾
لِّيَـغۡفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنۡ ذَنۡۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعۡمَتَهٗ عَلَيۡكَ وَيَهۡدِيَكَ صِرَاطًا مُّسۡتَقِيۡمًا ۙ
﴿48:2﴾
وَّ يَنۡصُرَكَ اللّٰهُ نَصۡرًا عَزِيۡزًا ﴿48:3﴾
هُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ السَّكِيۡنَةَ فِىۡ قُلُوۡبِ الۡمُؤۡمِنِيۡنَ لِيَزۡدَادُوۡۤا اِيۡمَانًا مَّعَ اِيۡمَانِهِمۡ ؕ وَلِلّٰهِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَكَانَ اللّٰهُ عَلِيۡمًا حَكِيۡمًا ۙ
﴿48:4﴾
لِّيُدۡخِلَ الۡمُؤۡمِنِيۡنَ وَالۡمُؤۡمِنٰتِ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَا وَيُكَفِّرَ عَنۡهُمۡ سَيِّاٰتِهِمۡؕ وَكَانَ ذٰ لِكَ عِنۡدَ اللّٰهِ فَوۡزًا عَظِيۡمًا ۙ
﴿48:5﴾
وَّيُعَذِّبَ الۡمُنٰفِقِيۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡمُشۡرِكِيۡنَ وَ الۡمُشۡرِكٰتِ الظَّآنِّيۡنَ بِاللّٰهِ ظَنَّ السَّوۡءِؕ عَلَيۡهِمۡ دَآئِرَةُ السَّوۡءِ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَاَعَدَّ لَهُمۡ جَهَنَّمَؕ وَسَآءَتۡ مَصِيۡرًا
﴿48:6﴾
وَلِلّٰهِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَكَانَ اللّٰهُ عَزِيۡزًا حَكِيۡمًا
﴿48:7﴾
اِنَّاۤ اَرۡسَلۡنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيۡرًا ۙ
﴿48:8﴾
لِّـتُؤۡمِنُوۡا بِاللّٰهِ وَ رَسُوۡلِهٖ وَتُعَزِّرُوۡهُ وَتُوَقِّرُوۡهُ ؕ وَتُسَبِّحُوۡهُ بُكۡرَةً وَّاَصِيۡلًا
﴿48:9﴾
اِنَّ الَّذِيۡنَ يُبَايِعُوۡنَكَ اِنَّمَا يُبَايِعُوۡنَ اللّٰهَ ؕ يَدُ اللّٰهِ فَوۡقَ اَيۡدِيۡهِمۡ ۚ فَمَنۡ نَّكَثَ فَاِنَّمَا يَنۡكُثُ عَلٰى نَفۡسِهٖۚ وَمَنۡ اَوۡفٰى بِمَا عٰهَدَ عَلَيۡهُ اللّٰهَ فَسَيُؤۡتِيۡهِ اَجۡرًا عَظِيۡمًا
﴿48:10﴾
48:1 (நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்.
48:2 உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும்,
48:3 இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும்தான்!
48:4 அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ‘ஸகீனத்’ நிம்மதியை இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
48:5 (அவன் எதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளானெனில்) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் நிரந்தரமாக வாழச் செய்வதற்காக! கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் நுழையச் செய்வதற்காகவும் மேலும், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு களைவதற்காகவும்தான். அல்லாஹ்விடத்தில் இது மகத்தான வெற்றியாக இருக்கிறது
48:6 மேலும், நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், இணை வைப்பாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவன் தண்டனை அளிப்பதற்காகவும்தான்! அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொண்டிருக்கிறார்கள். தீமையின் சுழற்சியில் தாமே வீழ்ந்து விட்டார்கள். அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது இறங்கியது. மேலும், அவன் அவர்களைச் சபித்தான். நரகத்தை அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
48:7 வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுடைய வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிக வல்லமைமிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
48:8 (நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்;
48:9 (எதற்காகவெனில் மக்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவருக்கு (தூதருக்கு) உறுதுணையாய் இருப்பதற்காகவும், அவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் மேலும், காலையிலும் மாலையிலும் நீங்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதற்காகவும்தான்!
48:10 (நபியே!) எவர்கள் உம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் உண்மையில் அல்லாஹ்விடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தவர்களாவர். அவர்களுடைய கைகள் மீது அல்லாஹ்வின் கை இருந்தது. ஆகவே யாரேனும் இந்த உறுதிப் பிரமாணத்தை முறித்தால், அதை முறித்ததன் கேடு அவரையே சூழும். மேலும், எவர் அல்லாஹ்விடம் தான் செய்திருந்த உறுதிப் பிரமாணத்தை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் அதிவிரைவில் மகத்தான கூலியை வழங்குவான்.
| |