|
حٰمٓ ۚ ﴿45:1﴾
تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِ
﴿45:2﴾
اِنَّ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰيٰتٍ لِّلۡمُؤۡمِنِيۡنَؕ
﴿45:3﴾
وَفِىۡ خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِنۡ دَآبَّةٍ اٰيٰتٌ لِّقَوۡمٍ يُّوۡقِنُوۡنَۙ
﴿45:4﴾
وَاخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنۡزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنۡ رِّزۡقٍ فَاَحۡيَا بِهِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَ تَصۡرِيۡفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوۡمٍ يَّعۡقِلُوۡنَ
﴿45:5﴾
تِلۡكَ اٰيٰتُ اللّٰهِ نَـتۡلُوۡهَا عَلَيۡكَ بِالۡحَقِّ ۚ فَبِاَىِّ حَدِيۡثٍۢ بَعۡدَ اللّٰهِ وَاٰيٰتِهٖ يُؤۡمِنُوۡنَ
﴿45:6﴾
وَيۡلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيۡمٍۙ ﴿45:7﴾
يَّسۡمَعُ اٰيٰتِ اللّٰهِ تُتۡلٰى عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرًا كَاَنۡ لَّمۡ يَسۡمَعۡهَا ۚ فَبَشِّرۡهُ بِعَذَابٍ اَ لِيۡمٍ
﴿45:8﴾
وَاِذَا عَلِمَ مِنۡ اٰيٰتِنَا شَيۡـئًـا اۨتَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓـئِكَ لَهُمۡ عَذَابٌ مُّهِيۡنٌ ؕ
﴿45:9﴾
مِنۡ وَّرَآئِهِمۡ جَهَنَّمُۚ وَلَا يُغۡنِىۡ عَنۡهُمۡ مَّا كَسَبُوۡا شَيۡـئًـا وَّلَا مَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰهِ اَوۡلِيَآءَ ۚ وَلَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌؕ
﴿45:10﴾
هٰذَا هُدًى ۚ وَالَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٌ مِّنۡ رِّجۡزٍ اَلِيۡمٌ
﴿45:11﴾
45:1 ஹாமீம்.
45:2 இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
45:3 உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
45:4 மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.
45:5 இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன.
45:6 இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
45:7 பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான்.
45:8 அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும்.
45:9 நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது.
45:10 அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது.
45:11 இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.
| |