|
حٰمٓ ۛۚ ﴿43:1﴾
وَالۡكِتٰبِ الۡمُبِيۡنِ ۛۙ ﴿43:2﴾
اِنَّا جَعَلۡنٰهُ قُرۡءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمۡ تَعۡقِلُوۡنَۚ
﴿43:3﴾
وَاِنَّهٗ فِىۡۤ اُمِّ الۡكِتٰبِ لَدَيۡنَا لَعَلِىٌّ حَكِيۡمٌؕ
﴿43:4﴾
اَفَنَضۡرِبُ عَنۡكُمُ الذِّكۡرَ صَفۡحًا اَنۡ كُنۡتُمۡ قَوۡمًا مُّسۡرِفِيۡنَ
﴿43:5﴾
وَكَمۡ اَرۡسَلۡنَا مِنۡ نَّبِىٍّ فِى الۡاَوَّلِيۡنَ
﴿43:6﴾
وَمَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ نَّبِىٍّ اِلَّا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ
﴿43:7﴾
فَاَهۡلَـكۡنَاۤ اَشَدَّ مِنۡهُمۡ بَطۡشًا وَّمَضٰى مَثَلُ الۡاَوَّلِيۡنَ
﴿43:8﴾
وَلَـئِنۡ سَاَلۡتَهُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَيَقُوۡلُنَّ خَلَقَهُنَّ الۡعَزِيۡزُ الۡعَلِيۡمُۙ
﴿43:9﴾
الَّذِىۡ جَعَلَ لَـكُمُ الۡاَرۡضَ مَهۡدًا وَّ جَعَلَ لَكُمۡ فِيۡهَا سُبُلًا لَّعَلَّكُمۡ تَهۡتَدُوۡنَۚ
﴿43:10﴾
وَالَّذِىۡ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍۚ فَاَنۡشَرۡنَا بِهٖ بَلۡدَةً مَّيۡتًا ۚ كَذٰلِكَ تُخۡرَجُوۡنَ
﴿43:11﴾
وَالَّذِىۡ خَلَقَ الۡاَزۡوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمۡ مِّنَ الۡفُلۡكِ وَالۡاَنۡعَامِ مَا تَرۡكَبُوۡنَۙ
﴿43:12﴾
لِتَسۡتَوٗا عَلٰى ظُهُوۡرِهٖ ثُمَّ تَذۡكُرُوۡا نِعۡمَةَ رَبِّكُمۡ اِذَا اسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُوۡلُوۡا سُبۡحٰنَ الَّذِىۡ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقۡرِنِيۡنَۙ
﴿43:13﴾
وَاِنَّاۤ اِلٰى رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ ﴿43:14﴾
وَجَعَلُوۡا لَهٗ مِنۡ عِبَادِهٖ جُزۡءًا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَـكَفُوۡرٌ مُّبِيۡنٌ ؕ
﴿43:15﴾
43:1 ஹாமீம்.
43:2 இந்தத் தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!
43:3 நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக!
43:4 மேலும், உண்மையில் இது ‘உம்முல் கிதாபில்’* பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது!
43:5 நீங்கள் வரம்புமீறிச் சென்றுவிட்டிருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் உங்கள் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்திவிடுவோமா, என்ன?
43:6 முன்பு வாழ்ந்து சென்ற சமூகங்களில் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பியிருந்தோம்;
43:7 அவர்களிடம் வந்த எந்தத் தூதரையும் அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை!
43:8 ஆக, எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டிருக்கின்றன.
43:9 நீர் அவர்களிடம் “வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?” என்று கேட்பீராயின், “வல்லமையும் பேரறிவும் கொண்டவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.
43:10 அவன்தான் உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டில் ஆக்கினான் அதிலே உங்களுக்காக பாதைகளை அமைத்தான்; நீங்கள் (நாடிய இடங்களுக்கான) வழியை அடைவதற்காக!
43:11 மேலும், வானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நீரை இறக்கினான். அதன் மூலம் இறந்த பூமிக்கு உயிர் கொடுத்தெழுப்பினான். இவ்வாறே (ஒருநாள் பூமிக்குள்ளிருந்து) நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.
43:12 அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். மேலும், உங்களுக்காகக் கப்பல்களையும், கால்நடைகளையும் வாகனங்களாய் அமைத்தவனும் அவனே!
43:13 நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது ஏறி அமர்வதற்காகவும், அவற்றின் மீது அமர்ந்த பிறகு உங்கள் இறைவனின் பேருதவியை நீங்கள் நினைவுகூர்ந்து இவ்வாறு பிரார்த்திப்பதற்காகவும்தான்: “தூய்மையானவன்; மேலும், இவற்றையெல்லாம் எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன்! இவற்றை அவன் வசப்படுத்தித் தராவிட்டால் அவற்றை வசப்படுத்தும் ஆற்றல் எங்களிடம் இருக்கவில்லை.
43:14 மேலும், நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒருநாள் திரும்பிச் செல்லக்கூடியவர்களாவோம்.”
43:15 இவர்கள் (இவை அனைத்தையும் அறிந்து ஏற்றுக் கொண்ட பிறகும்) அவனுடைய அடியார்களில் சிலரை அவனுடைய ஓர் அம்சமாக ஆக்கிவிட்டார்கள். உண்மையாதெனில், மனிதன் வெளிப்படையாக நன்றி கொன்றவனாயிருக்கின்றான்.
| |