|
حٰمٓ ﴿42:1﴾
عٓسٓقٓ ﴿42:2﴾
كَذٰلِكَ يُوۡحِىۡۤ اِلَيۡكَ وَاِلَى الَّذِيۡنَ مِنۡ قَبۡلِكَۙ اللّٰهُ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ
﴿42:3﴾
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ وَهُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ
﴿42:4﴾
تَـكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡ فَوۡقِهِنَّ وَالۡمَلٰٓـئِكَةُ يُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُوۡنَ لِمَنۡ فِى الۡاَرۡضِؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِيۡمُ
﴿42:5﴾
وَالَّذِيۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَ اللّٰهُ حَفِيۡظٌ عَلَيۡهِمۡۖ وَمَاۤ اَنۡتَ عَلَيۡهِمۡ بِوَكِيۡلٍ
﴿42:6﴾
وَكَذٰلِكَ اَوۡحَيۡنَاۤ اِلَيۡكَ قُرۡاٰنًا عَرَبِيًّا لِّـتُـنۡذِرَ اُمَّ الۡقُرٰى وَمَنۡ حَوۡلَهَا وَتُنۡذِرَ يَوۡمَ الۡجَمۡعِ لَا رَيۡبَ فِيۡهِؕ فَرِيۡقٌ فِى الۡجَنَّةِ وَفَرِيۡقٌ فِى السَّعِيۡرِ
﴿42:7﴾
وَلَوۡ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمۡ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنۡ يُّدۡخِلُ مَنۡ يَّشَآءُ فِىۡ رَحۡمَتِهٖؕ وَالظّٰلِمُوۡنَ مَا لَهُمۡ مِّنۡ وَّلِىٍّ وَّلَا نَصِيۡرٍ
﴿42:8﴾
اَمِ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَۚ فَاللّٰهُ هُوَ الۡوَلِىُّ وَهُوَ يُحۡىِ الۡمَوۡتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ
﴿42:9﴾
42:1 ஹா, மீம்,
42:2 ஐன், ஸீன், காஃப்,
42:3 வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ், உமக்கும் உமக்கு முன் வாழ்ந்து சென்ற (இறைத் தூது)வர்களுக்கும் இவ்வாறே வஹி* அறிவித்துக் கொண்டிருக்கின்றான்.
42:4 வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியவை. அவன் உயர்வுடையோனும் மகத்துவமிக்கவனுமாவான்.
42:5 மேலே இருந்து வானங்கள் வெடித்து விடலாம். ஆனால் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதுடன் பூமியில் வாழ்வோரின் பாவமன்னிப்புக்காக வேண்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! உண்மையில், அல்லாஹ்வே பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
42:6 எவர்கள் அவனை விடுத்து தமக்கு வேறு சில பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரோ அவர்களை அல்லாஹ்வே கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.
42:7 (ஆம், நபியே! இவ்வாறே நாம்) அரபிமொழியிலுள்ள இந்த குர்ஆனை உமக்கு வஹி அறிவித்துள்ளோம். (மக்காவாகிய) நகரங்களின் தாயையும் அதனைச் சூழ இருப்பவர்களையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும்; மேலும், ஒன்று திரட்டப்படும் நாளினைப் பற்றி நீர் அச்சுறுத்தவும் வேண்டும் என்பதற்காக! அந்நாள் வருவதில் எவ்வித ஐயமுமில்லை. ஒரு சாரார் சுவர்க்கத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள்; இன்னொரு சாரார் நரகத்திற்கு!
42:8 அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக அமைத்திருப்பான். எனினும், அவன் நாடுகின்றவர்களைத் தன் கருணையில் நுழையச் செய்கிறான். மேலும், கொடுமைக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இலர்.
42:9 என்ன, இவர்கள் அவனை விடுத்து பிறரைத் தம் பாது காவலர்களாய் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அறிவீனர்களாய் இருக்கின்றார்களே! அல்லாஹ்வே பாதுகாவலனாவான். அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
| |