|
حٰمٓ ۚ ﴿40:1﴾
تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡعَلِيۡمِۙ
﴿40:2﴾
غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِيۡدِ الۡعِقَابِ ذِى الطَّوۡلِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ اِلَيۡهِ الۡمَصِيۡرُ
﴿40:3﴾
مَا يُجَادِلُ فِىۡۤ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيۡنَ كَفَرُوۡا فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِى الۡبِلَادِ
﴿40:4﴾
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّ الۡاَحۡزَابُ مِنۡۢ بَعۡدِهِمۡ وَهَمَّتۡ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوۡلِهِمۡ لِيَاۡخُذُوۡهُ ؕ وَجَادَلُوۡا بِالۡبَاطِلِ لِيُدۡحِضُوۡا بِهِ الۡحَقَّ فَاَخَذۡتُهُمۡ فَكَيۡفَ كَانَ عِقَابِ
﴿40:5﴾
وَكَذٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيۡنَ كَفَرُوۡۤا اَنَّهُمۡ اَصۡحٰبُ النَّارِ ۘ
﴿40:6﴾
اَلَّذِيۡنَ يَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهٗ يُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُوۡنَ بِهٖ وَيَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِيۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَىۡءٍ رَّحۡمَةً وَّعِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِيۡنَ تَابُوۡا وَاتَّبَعُوۡا سَبِيۡلَكَ وَقِهِمۡ عَذَابَ الۡجَحِيۡمِ
﴿40:7﴾
رَبَّنَا وَاَدۡخِلۡهُمۡ جَنّٰتِ عَدۡنِ اۨلَّتِىۡ وَعَدْتَّهُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِهِمۡ وَاَزۡوَاجِهِمۡ وَذُرِّيّٰتِهِمۡ ؕ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ ۙ
﴿40:8﴾
وَقِهِمُ السَّيِّاٰتِ ؕ وَمَنۡ تَقِ السَّيِّاٰتِ يَوۡمَـئِذٍ فَقَدۡ رَحِمۡتَهٗ ؕ وَذٰ لِكَ هُوَ الۡفَوۡزُ الۡعَظِيۡمُ
﴿40:9﴾
40:1 ஹா மீம்;
40:2 இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்!
40:3 பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது.
40:4 அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம்.
40:5 இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்.
40:6 பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது.
40:7 அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!
40:8 மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய்.
40:9 மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.”
| |