|
تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَكِيۡمِ
﴿39:1﴾
اِنَّاۤ اَنۡزَلۡنَاۤ اِلَيۡكَ الۡكِتٰبَ بِالۡحَقِّ فَاعۡبُدِ اللّٰهَ مُخۡلِصًا لَّهُ الدِّيۡنَ ؕ
﴿39:2﴾
اَلَا لِلّٰهِ الدِّيۡنُ الۡخَالِصُ ؕ وَالَّذِيۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءَ ۘ مَا نَعۡبُدُهُمۡ اِلَّا لِيُقَرِّبُوۡنَاۤ اِلَى اللّٰهِ زُلۡفٰى ؕ اِنَّ اللّٰهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِىۡ مَا هُمۡ فِيۡهِ يَخۡتَلِفُوۡنَ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهۡدِىۡ مَنۡ هُوَ كٰذِبٌ كَفَّارٌ
﴿39:3﴾
لَوۡ اَرَادَ اللّٰهُ اَنۡ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصۡطَفٰى مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُ ۙ سُبۡحٰنَهٗ ؕ هُوَ اللّٰهُ الۡوَاحِدُ الۡقَهَّارُ
﴿39:4﴾
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ۚ يُكَوِّرُ الَّيۡلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى الَّيۡلِ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَؕ كُلٌّ يَّجۡرِىۡ لِاَجَلٍ مُّسَمًّىؕ اَلَا هُوَ الۡعَزِيۡزُ الۡغَفَّارُ
﴿39:5﴾
خَلَقَكُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَاَنۡزَلَ لَـكُمۡ مِّنَ الۡاَنۡعَامِ ثَمٰنِيَةَ اَزۡوَاجٍ ؕ يَخۡلُقُكُمۡ فِىۡ بُطُوۡنِ اُمَّهٰتِكُمۡ خَلۡقًا مِّنۡۢ بَعۡدِ خَلۡقٍ فِىۡ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمۡ لَهُ الۡمُلۡكُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَ نّٰى تُصۡرَفُوۡنَ
﴿39:6﴾
اِنۡ تَكۡفُرُوۡا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنۡكُمۡ وَلَا يَرۡضٰى لِعِبَادِهِ الۡـكُفۡرَ ۚ وَاِنۡ تَشۡكُرُوۡا يَرۡضَهُ لَـكُمۡ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرٰى ؕ ثُمَّ اِلٰى رَبِّكُمۡ مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ؕ اِنَّهٗ عَلِيۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ
﴿39:7﴾
وَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِيۡبًا اِلَيۡهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعۡمَةً مِّنۡهُ نَسِىَ مَا كَانَ يَدۡعُوۡۤا اِلَيۡهِ مِنۡ قَبۡلُ وَجَعَلَ لِلّٰهِ اَنۡدَادًا لِّيُـضِلَّ عَنۡ سَبِيۡلِهٖ ؕ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيۡلًا ۖ اِنَّكَ مِنۡ اَصۡحٰبِ النَّارِ
﴿39:8﴾
اَمَّنۡ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيۡلِ سَاجِدًا وَّقَآئِمًا يَّحۡذَرُ الۡاٰخِرَةَ وَيَرۡجُوۡا رَحۡمَةَ رَبِّهٖؕ قُلۡ هَلۡ يَسۡتَوِى الَّذِيۡنَ يَعۡلَمُوۡنَ وَالَّذِيۡنَ لَا يَعۡلَمُوۡنَؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الۡاَلۡبَابِ
﴿39:9﴾
39:1 வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கிறது.
39:2 (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்!
39:3 அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
39:4 அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான்.
39:5 அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்!
39:6 அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?
39:7 நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
39:8 மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.”
39:9 (இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”
| |