|
صٓ وَالۡقُرۡاٰنِ ذِى الذِّكۡرِؕ ﴿38:1﴾
بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ عِزَّةٍ وَّشِقَاقٍ
﴿38:2﴾
كَمۡ اَهۡلَـكۡنَا مِنۡ قَبۡلِهِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيۡنَ مَنَاصٍ
﴿38:3﴾
وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَهُمۡ مُّنۡذِرٌ مِّنۡهُمۡ وَقَالَ الۡكٰفِرُوۡنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۖۚ
﴿38:4﴾
اَجَعَلَ الۡاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَىۡءٌ عُجَابٌ
﴿38:5﴾
وَانْطَلَقَ الۡمَلَاُ مِنۡهُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰٓى اٰلِهَتِكُمۡ ۖۚ اِنَّ هٰذَا لَشَىۡءٌ يُّرَادُ ۖۚ
﴿38:6﴾
مَا سَمِعۡنَا بِهٰذَا فِى الۡمِلَّةِ الۡاٰخِرَةِ ۖۚ اِنۡ هٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖۚ
﴿38:7﴾
ءَاُنۡزِلَ عَلَيۡهِ الذِّكۡرُ مِنۡۢ بَيۡنِنَاؕ بَلۡ هُمۡ فِىۡ شَكٍّ مِّنۡ ذِكۡرِىۡۚ بَلْ لَّمَّا يَذُوۡقُوۡا عَذَابِؕ
﴿38:8﴾
اَمۡ عِنۡدَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ الۡعَزِيۡزِ الۡوَهَّابِۚ
﴿38:9﴾
اَمۡ لَهُمۡ مُّلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَافَلۡيَرۡتَقُوۡا فِى الۡاَسۡبَابِ
﴿38:10﴾
جُنۡدٌ مَّا هُنَالِكَ مَهۡزُوۡمٌ مِّنَ الۡاَحۡزَابِ
﴿38:11﴾
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّفِرۡعَوۡنُ ذُو الۡاَوۡتَادِۙ
﴿38:12﴾
وَثَمُوۡدُ وَقَوۡمُ لُوۡطٍ وَّاَصۡحٰبُ لْئَیْكَةِ ؕ اُولٰٓـئِكَ الۡاَحۡزَابُ
﴿38:13﴾
اِنۡ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ
﴿38:14﴾
38:1 ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!
38:2 ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.
38:3 இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை.
38:4 அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்;
38:5 என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!”
38:6 மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது;
38:7 அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை.
38:8 நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்!
38:9 என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா?
38:10 அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும்.
38:11 பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள்.
38:12 இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும்,
38:13 மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள்.
38:14 கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது.
| |