|
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الۡكٰفِرِيۡنَ وَالۡمُنٰفِقِيۡنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيۡمًا حَكِيۡمًا ۙ
﴿33:1﴾
وَّاتَّبِعۡ مَا يُوۡحٰٓى اِلَيۡكَ مِنۡ رَّبِّكَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرًا ۙ
﴿33:2﴾
وَّتَوَكَّلۡ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيۡلًا
﴿33:3﴾
مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَيۡنِ فِىۡ جَوۡفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوۡنَ مِنۡهُنَّ اُمَّهٰتِكُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِيَآءَكُمۡ اَبۡنَآءَكُمۡ ؕ ذٰ لِكُمۡ قَوۡلُـكُمۡ بِاَ فۡوَاهِكُمۡ ؕ وَاللّٰهُ يَقُوۡلُ الۡحَقَّ وَهُوَ يَهۡدِى السَّبِيۡلَ
﴿33:4﴾
اُدۡعُوۡهُمۡ لِاٰبَآئِهِمۡ هُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰهِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَهُمۡ فَاِخۡوَانُكُمۡ فِى الدِّيۡنِ وَمَوَالِيۡكُمۡؕ وَ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ فِيۡمَاۤ اَخۡطَاۡ تُمۡ بِهٖۙ وَلٰكِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُكُمۡ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِيۡمًا
﴿33:5﴾
اَلنَّبِىُّ اَوۡلٰى بِالۡمُؤۡمِنِيۡنَ مِنۡ اَنۡفُسِهِمۡ وَاَزۡوَاجُهٗۤ اُمَّهٰتُهُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُهُمۡ اَوۡلٰى بِبَعۡضٍ فِىۡ كِتٰبِ اللّٰهِ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ وَالۡمُهٰجِرِيۡنَ اِلَّاۤ اَنۡ تَفۡعَلُوۡۤا اِلٰٓى اَوۡلِيٰٓـئِكُمۡ مَّعۡرُوۡفًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الۡكِتٰبِ مَسۡطُوۡرًا
﴿33:6﴾
وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِيّٖنَ مِيۡثَاقَهُمۡ وَمِنۡكَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰهِيۡمَ وَمُوۡسٰى وَعِيۡسَى ابۡنِ مَرۡيَمَ وَاَخَذۡنَا مِنۡهُمۡ مِّيۡثاقًا غَلِيۡظًا ۙ
﴿33:7﴾
لِّيَسۡئَلَ الصّٰدِقِيۡنَ عَنۡ صِدۡقِهِمۡۚ وَاَعَدَّ لِلۡكٰفِرِيۡنَ عَذَابًا اَ لِيۡمًا
﴿33:8﴾
33:1 நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
33:2 உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
33:3 அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:4 அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான்.
33:5 வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
33:6 திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
33:7 மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.
33:8 உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான்.
| |