|
الٓمّٓ ۚۙ ﴿3:1﴾
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الۡحَىُّ الۡقَيُّوۡمُؕ
﴿3:2﴾
نَزَّلَ عَلَيۡكَ الۡـكِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَاَنۡزَلَ التَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَۙ
﴿3:3﴾
مِنۡ قَبۡلُ هُدًى لِّلنَّاسِ وَاَنۡزَلَ الۡفُرۡقَانَ ؕ اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمۡ عَذَابٌ شَدِيۡدٌ ؕ وَاللّٰهُ عَزِيۡزٌ ذُو انۡتِقَامٍؕ
﴿3:4﴾
اِنَّ اللّٰهَ لَا يَخۡفٰى عَلَيۡهِ شَىۡءٌ فِى الۡاَرۡضِ وَلَا فِى السَّمَآءِ ؕ
﴿3:5﴾
هُوَ الَّذِىۡ يُصَوِّرُكُمۡ فِى الۡاَرۡحَامِ كَيۡفَ يَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ
﴿3:6﴾
هُوَ الَّذِىۡۤ اَنۡزَلَ عَلَيۡكَ الۡكِتٰبَ مِنۡهُ اٰيٰتٌ مُّحۡكَمٰتٌ هُنَّ اُمُّ الۡكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌؕ فَاَمَّا الَّذِيۡنَ فِىۡ قُلُوۡبِهِمۡ زَيۡغٌ فَيَتَّبِعُوۡنَ مَا تَشَابَهَ مِنۡهُ ابۡتِغَآءَ الۡفِتۡنَةِ وَابۡتِغَآءَ تَاۡوِيۡلِهٖۚ وَمَا يَعۡلَمُ تَاۡوِيۡلَهٗۤ اِلَّا اللّٰهُ ۘ وَ الرّٰسِخُوۡنَ فِى الۡعِلۡمِ يَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنۡ عِنۡدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ
﴿3:7﴾
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً ۚ اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ
﴿3:8﴾
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوۡمٍ لَّا رَيۡبَ فِيۡهِؕ اِنَّ اللّٰهَ لَا يُخۡلِفُ الۡمِيۡعَادَ
﴿3:9﴾
3:1 அலிஃப், லாம், மீம்.
3:2 அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
3:3 (நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும்
3:4 இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான்.
3:5 திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று!
3:6 அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.
3:7 (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
3:8 அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
3:9 எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”
| |