|
طٰسٓمٓ ﴿28:1﴾
تِلۡكَ اٰيٰتُ الۡـكِتٰبِ الۡمُبِيۡنِ ﴿28:2﴾
نَـتۡلُوۡا عَلَيۡكَ مِنۡ نَّبَاِ مُوۡسٰى وَفِرۡعَوۡنَ بِالۡحَـقِّ لِقَوۡمٍ يُّؤۡمِنُوۡنَ
﴿28:3﴾
اِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِى الۡاَرۡضِ وَجَعَلَ اَهۡلَهَا شِيَـعًا يَّسۡتَضۡعِفُ طَآئِفَةً مِّنۡهُمۡ يُذَبِّحُ اَبۡنَآءَهُمۡ وَيَسۡتَحۡىٖ نِسَآءَهُمۡ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الۡمُفۡسِدِيۡنَ
﴿28:4﴾
وَنُرِيۡدُ اَنۡ نَّمُنَّ عَلَى الَّذِيۡنَ اسۡتُضۡعِفُوۡا فِى الۡاَرۡضِ وَنَجۡعَلَهُمۡ اَـئِمَّةً وَّنَجۡعَلَهُمُ الۡوٰرِثِيۡنَۙ
﴿28:5﴾
وَنُمَكِّنَ لَهُمۡ فِى الۡاَرۡضِ وَنُرِىَ فِرۡعَوۡنَ وَهَامٰنَ وَجُنُوۡدَهُمَا مِنۡهُمۡ مَّا كَانُوۡا يَحۡذَرُوۡنَ
﴿28:6﴾
وَاَوۡحَيۡنَاۤ اِلٰٓى اُمِّ مُوۡسٰٓى اَنۡ اَرۡضِعِيۡهِۚ فَاِذَا خِفۡتِ عَلَيۡهِ فَاَ لۡقِيۡهِ فِى الۡيَمِّ وَلَا تَخَافِىۡ وَلَا تَحۡزَنِىۡۚ اِنَّا رَآدُّوۡهُ اِلَيۡكِ وَجٰعِلُوۡهُ مِنَ الۡمُرۡسَلِيۡنَ
﴿28:7﴾
فَالۡتَقَطَهٗۤ اٰلُ فِرۡعَوۡنَ لِيَكُوۡنَ لَهُمۡ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرۡعَوۡنَ وَهَامٰنَ وَجُنُوۡدَهُمَا كَانُوۡا خٰطِـئِيۡنَ
﴿28:8﴾
وَقَالَتِ امۡرَاَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَيۡنٍ لِّىۡ وَلَكَ ؕ لَا تَقۡتُلُوۡهُ ۖ عَسٰٓى اَنۡ يَّـنۡفَعَنَاۤ اَوۡ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمۡ لَا يَشۡعُرُوۡنَ
﴿28:9﴾
وَاَصۡبَحَ فُؤَادُ اُمِّ مُوۡسٰى فٰرِغًا ؕ اِنۡ كَادَتۡ لَـتُبۡدِىۡ بِهٖ لَوۡلَاۤ اَنۡ رَّبَطۡنَا عَلٰى قَلۡبِهَا لِتَكُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ
﴿28:10﴾
وَقَالَتۡ لِاُخۡتِهٖ قُصِّيۡهِ فَبَصُرَتۡ بِهٖ عَنۡ جُنُبٍ وَّهُمۡ لَا يَشۡعُرُوۡنَۙ
﴿28:11﴾
وَحَرَّمۡنَا عَلَيۡهِ الۡمَرَاضِعَ مِنۡ قَبۡلُ فَقَالَتۡ هَلۡ اَدُلُّـكُمۡ عَلٰٓى اَهۡلِ بَيۡتٍ يَّكۡفُلُوۡنَهٗ لَـكُمۡ وَهُمۡ لَهٗ نٰصِحُوۡنَ
﴿28:12﴾
فَرَدَدۡنٰهُ اِلٰٓى اُمِّهٖ كَىۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ اَنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُوۡنَ
﴿28:13﴾
28:1 தாஸீம்மீம்.
28:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
28:3 நம்பிக்கை கொள்ளும் மக்களின் நலனுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில செய்திகளை மிகத் துல்லியமாக உங்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம்.
28:4 திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்; அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான்.
28:5 மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.
28:6 மேலும், அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.
28:7 மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்!”
28:8 இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள்.
28:9 ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள்.
28:10 அங்கே.. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. (நமது வாக்குறுதியின்மீது) நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்தவில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்த முனைந்திருப்பார்.
28:11 அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின்தொடர்ந்தே செல்!” அவ்வாறே (எதிரிகள்) அறிந்து கொள்ளாத வகையில் தூரத்திலிருந்து அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
28:12 மேலும், இதர பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் அருந்துவதை விட்டு முன்னரே, அக்குழந்தையைத் தடுத்திருந்தோம். (இந்நிலையைக் கவனித்து) அச்சிறுமி கூறினாள்: “இக்குழந்தையைப் பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப்பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?”
28:13 இவ்வாறு நாம் மூஸாவை அவருடைய தாயாரிடம் திரும்பக் கொண்டு வந்தோம்; அவர் கண்குளிர்ந்து, கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும்தான்! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை.
| |