|
قُلِ الۡحَمۡدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيۡنَ اصۡطَفٰىؕ ءٰۤللّٰهُ خَيۡرٌ اَمَّا يُشۡرِكُوۡنَؕ
﴿27:59﴾
اَمَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ لَـكُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنۡۢبَتۡنَا بِهٖ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٍ ۚ مَا كَانَ لَـكُمۡ اَنۡ تُـنۡۢبِتُوۡا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلۡ هُمۡ قَوۡمٌ يَّعۡدِلُوۡنَ ؕ
﴿27:60﴾
اَمَّنۡ جَعَلَ الۡاَرۡضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنۡهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيۡنَ الۡبَحۡرَيۡنِ حَاجِزًا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلۡ اَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُوۡنَ ؕ
﴿27:61﴾
اَمَّنۡ يُّجِيۡبُ الۡمُضۡطَرَّ اِذَا دَعَاهُ وَيَكۡشِفُ السُّوۡٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ الۡاَرۡضِ ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِيۡلًا مَّا تَذَكَّرُوۡنَ ؕ
﴿27:62﴾
اَمَّنۡ يَّهۡدِيۡكُمۡ فِىۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَ الۡبَحۡرِ وَمَنۡ يُّرۡسِلُ الرِّيٰحَ بُشۡرًۢا بَيۡنَ يَدَىۡ رَحۡمَتِهٖؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِؕ تَعٰلَى اللّٰهُ عَمَّا يُشۡرِكُوۡنَؕ
﴿27:63﴾
اَمَّنۡ يَّبۡدَؤُا الۡخَـلۡقَ ثُمَّ يُعِيۡدُهٗ وَمَنۡ يَّرۡزُقُكُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِؕ قُلۡ هَاتُوۡا بُرۡهَانَكُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ
﴿27:64﴾
قُلْ لَّا يَعۡلَمُ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ الۡغَيۡبَ اِلَّا اللّٰهُؕ وَمَا يَشۡعُرُوۡنَ اَيَّانَ يُبۡعَثُوۡنَ
﴿27:65﴾
بَلِ ادّٰرَكَ عِلۡمُهُمۡ فِى الۡاٰخِرَةِ بَلۡ هُمۡ فِىۡ شَكٍّ مِّنۡهَا بَلۡ هُمۡ مِّنۡهَا عَمُوۡنَ
﴿27:66﴾
27:59 (நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?”
27:60 வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
27:61 மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள்.
27:62 துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!
27:63 தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு!
27:64 முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!”
27:65 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!”
27:66 உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள்.
| |