|
وَلَـقَدۡ اٰتَيۡنَا دَاوٗدَ وَ سُلَيۡمٰنَ عِلۡمًا ۚ وَقَالَا الۡحَمۡدُ لِلّٰهِ الَّذِىۡ فَضَّلَنَا عَلٰى كَثِيۡرٍ مِّنۡ عِبَادِهِ الۡمُؤۡمِنِيۡنَ
﴿27:15﴾
وَوَرِثَ سُلَيۡمٰنُ دَاوٗدَ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمۡنَا مَنۡطِقَ الطَّيۡرِ وَاُوۡتِيۡنَا مِنۡ كُلِّ شَىۡءٍؕ اِنَّ هٰذَا لَهُوَ الۡفَضۡلُ الۡمُبِيۡنُ
﴿27:16﴾
وَحُشِرَ لِسُلَيۡمٰنَ جُنُوۡدُهٗ مِنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ وَالطَّيۡرِ فَهُمۡ يُوۡزَعُوۡنَ
﴿27:17﴾
حَتّٰٓى اِذَاۤ اَتَوۡا عَلٰى وَادِ النَّمۡلِۙ قَالَتۡ نَمۡلَةٌ يّٰۤاَيُّهَا النَّمۡلُ ادۡخُلُوۡا مَسٰكِنَكُمۡۚ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمٰنُ وَجُنُوۡدُهٗۙ وَهُمۡ لَا يَشۡعُرُوۡنَ
﴿27:18﴾
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنۡ قَوۡلِهَا وَقَالَ رَبِّ اَوۡزِعۡنِىۡۤ اَنۡ اَشۡكُرَ نِعۡمَتَكَ الَّتِىۡۤ اَنۡعَمۡتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًـا تَرۡضٰٮهُ وَاَدۡخِلۡنِىۡ بِرَحۡمَتِكَ فِىۡ عِبَادِكَ الصّٰلِحِيۡنَ
﴿27:19﴾
وَتَفَقَّدَ الطَّيۡرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الۡهُدۡهُدَ ۖ اَمۡ كَانَ مِنَ الۡغَآئِبِيۡنَ
﴿27:20﴾
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيۡدًا اَوۡ لَا۟اَذۡبَحَنَّهٗۤ اَوۡ لَيَاۡتِيَنِّىۡ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍ
﴿27:21﴾
فَمَكَثَ غَيۡرَ بَعِيۡدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمۡ تُحِطۡ بِهٖ وَ جِئۡتُكَ مِنۡ سَبَاٍۢ بِنَبَاٍ يَّقِيۡنٍ
﴿27:22﴾
اِنِّىۡ وَجَدتُّ امۡرَاَةً تَمۡلِكُهُمۡ وَاُوۡتِيَتۡ مِنۡ كُلِّ شَىۡءٍ وَّلَهَا عَرۡشٌ عَظِيۡمٌ
﴿27:23﴾
وَجَدْتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُوۡنَ لِلشَّمۡسِ مِنۡ دُوۡنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيۡطٰنُ اَعۡمَالَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ السَّبِيۡلِ فَهُمۡ لَا يَهۡتَدُوۡنَۙ
﴿27:24﴾
اَلَّا يَسۡجُدُوۡا لِلّٰهِ الَّذِىۡ يُخۡرِجُ الۡخَبۡءَ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ
﴿27:25﴾
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِيۡمِ ۩
﴿27:26﴾
قَالَ سَنَـنۡظُرُ اَصَدَقۡتَ اَمۡ كُنۡتَ مِنَ الۡكٰذِبِيۡنَ
﴿27:27﴾
اِذۡهَبْ بِّكِتٰبِىۡ هٰذَا فَاَلۡقِهۡ اِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَانْظُرۡ مَاذَا يَرۡجِعُوۡنَ
﴿27:28﴾
قَالَتۡ يٰۤاَيُّهَا الۡمَلَؤُا اِنِّىۡۤ اُلۡقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيۡمٌ
﴿27:29﴾
اِنَّهٗ مِنۡ سُلَيۡمٰنَ وَاِنَّهٗ بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ
﴿27:30﴾
اَلَّا تَعۡلُوۡا عَلَىَّ وَاۡتُوۡنِىۡ مُسۡلِمِيۡنَ
﴿27:31﴾
27:15 (மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.”
27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.”
27:17 மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.
27:18 (ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.”
27:19 ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”
27:20 (மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா?
27:21 நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.”
27:22 அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபஃ பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்.
27:23 அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது.
27:24 அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான்.
27:25 இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள்.
27:26 அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷûக்கு* உரிமையாளன் ஆவான்.
27:27 ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம்.
27:28 என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!”
27:29 அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது.
27:30 மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. “எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்.
27:31 மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும் எனும் வாசகம் அதில் உள்ளது.”
| |