|
طٰسٓ تِلۡكَ اٰيٰتُ الۡقُرۡاٰنِ وَكِتَابٍ مُّبِيۡنٍۙ
﴿27:1﴾
هُدًى وَّبُشۡرٰى لِلۡمُؤۡمِنِيۡنَۙ ﴿27:2﴾
الَّذِيۡنَ يُقِيۡمُوۡنَ الصَّلٰوةَ وَيُؤۡتُوۡنَ الزَّكٰوةَ وَ هُمۡ بِالۡاٰخِرَةِ هُمۡ يُوۡقِنُوۡنَ
﴿27:3﴾
اِنَّ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَةِ زَيَّـنَّا لَهُمۡ اَعۡمَالَهُمۡ فَهُمۡ يَعۡمَهُوۡنَؕ
﴿27:4﴾
اُولٰٓـئِكَ الَّذِيۡنَ لَهُمۡ سُوۡٓءُ الۡعَذَابِ وَهُمۡ فِى الۡاٰخِرَةِ هُمُ الۡاَخۡسَرُوۡنَ
﴿27:5﴾
وَاِنَّكَ لَـتُلَـقَّى الۡقُرۡاٰنَ مِنۡ لَّدُنۡ حَكِيۡمٍ عَلِيۡمٍ
﴿27:6﴾
اِذۡ قَالَ مُوۡسٰى لِاَهۡلِهٖۤ اِنِّىۡۤ اٰنَسۡتُ نَارًاؕ سَاٰتِيۡكُمۡ مِّنۡهَا بِخَبَرٍ اَوۡ اٰتِيۡكُمۡ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمۡ تَصۡطَلُوۡنَ
﴿27:7﴾
فَلَمَّا جَآءَهَا نُوۡدِىَ اَنۡۢ بُوۡرِكَ مَنۡ فِى النَّارِ وَ مَنۡ حَوۡلَهَا ؕ وَسُبۡحٰنَ اللّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ
﴿27:8﴾
يٰمُوۡسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُۙ
﴿27:9﴾
وَاَ لۡقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهۡتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدۡبِرًا وَّلَمۡ يُعَقِّبۡ ؕ يٰمُوۡسٰى لَا تَخَفۡ اِنِّىۡ لَا يَخَافُ لَدَىَّ الۡمُرۡسَلُوۡنَ ۖ
﴿27:10﴾
اِلَّا مَنۡ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنًۢا بَعۡدَ سُوۡٓءٍ فَاِنِّىۡ غَفُوۡرٌ رَّحِيۡمٌ
﴿27:11﴾
وَاَدۡخِلۡ يَدَكَ فِىۡ جَيۡبِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوۡٓءٍ فِىۡ تِسۡعِ اٰيٰتٍ اِلٰى فِرۡعَوۡنَ وَقَوۡمِهٖؕ اِنَّهُمۡ كَانُوۡا قَوۡمًا فٰسِقِيۡنَ
﴿27:12﴾
فَلَمَّا جَآءَتۡهُمۡ اٰيٰتُنَا مُبۡصِرَةً قَالُوۡا هٰذَا سِحۡرٌ مُّبِيۡنٌۚ
﴿27:13﴾
وَجَحَدُوۡا بِهَا وَاسۡتَيۡقَنَـتۡهَاۤ اَنۡفُسُهُمۡ ظُلۡمًا وَّعُلُوًّا ؕ فَانْظُرۡ كَيۡفَ كَانَ عَاقِبَةُ الۡمُفۡسِدِيۡنَ
﴿27:14﴾
27:1 தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
27:2 இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும்.
27:3 அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
27:4 உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள்.
27:5 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள்.
27:6 மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்.
27:7 (அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.”
27:8 அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்!
27:9 “மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்!
27:10 மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை;
27:11 ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன்.
27:12 மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள்.
27:13 ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
27:14 அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும்.
| |