طٰسٓمّٓ ﴿26:1﴾
تِلۡكَ اٰيٰتُ الۡكِتٰبِ الۡمُبِيۡنِ ﴿26:2﴾
لَعَلَّكَ بَاخِعٌ نَّـفۡسَكَ اَلَّا يَكُوۡنُوۡا مُؤۡمِنِيۡنَ
﴿26:3﴾
اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَيۡهِمۡ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتۡ اَعۡنَاقُهُمۡ لَهَا خٰضِعِيۡنَ
﴿26:4﴾
وَمَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ ذِكۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا كَانُوۡا عَنۡهُ مُعۡرِضِيۡنَ
﴿26:5﴾
فَقَدۡ كَذَّبُوۡا فَسَيَاۡتِيۡهِمۡ اَنۡۢـبٰٓـؤُا مَا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ
﴿26:6﴾
اَوَلَمۡ يَرَوۡا اِلَى الۡاَرۡضِ كَمۡ اَنۡۢبَتۡنَا فِيۡهَا مِنۡ كُلِّ زَوۡجٍ كَرِيۡمٍ
﴿26:7﴾
اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً ؕ وَّمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ
﴿26:8﴾
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ ﴿26:9﴾
26:1 தாஸீம்மீம்.
26:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:3 (நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே!
26:4 நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்!
26:5 கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்;
26:6 இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும்.
26:7 இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்!
26:8 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
26:9 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
|