|
تَبٰـرَكَ الَّذِىۡ نَزَّلَ الۡـفُرۡقَانَ عَلٰى عَبۡدِهٖ لِيَكُوۡنَ لِلۡعٰلَمِيۡنَ نَذِيۡرَا ۙ
﴿25:1﴾
اۨلَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدًا وَّلَمۡ يَكُنۡ لَّهٗ شَرِيۡكٌ فِى الۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَىۡءٍ فَقَدَّرَهٗ تَقۡدِيۡرًا
﴿25:2﴾
وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اٰلِهَةً لَّا يَخۡلُقُوۡنَ شَيۡـئًـا وَّهُمۡ يُخۡلَقُوۡنَ وَلَا يَمۡلِكُوۡنَ لِاَنۡفُسِهِمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا وَّلَا يَمۡلِكُوۡنَ مَوۡتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوۡرًا
﴿25:3﴾
وَقَالَ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّاۤ اِفۡكٌ اۨفۡتَـرٰٮهُ وَاَعَانَهٗ عَلَيۡهِ قَوۡمٌ اٰخَرُوۡنَ ۛۚ فَقَدۡ جَآءُوۡ ظُلۡمًا وَّزُوۡرًا ۛۚ
﴿25:4﴾
وَقَالُوۡۤا اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَ اكۡتَتَبَهَا فَهِىَ تُمۡلٰى عَلَيۡهِ بُكۡرَةً وَّاَصِيۡلًا
﴿25:5﴾
قُلۡ اَنۡزَلَهُ الَّذِىۡ يَعۡلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ اِنَّهٗ كَانَ غَفُوۡرًا رَّحِيۡمًا
﴿25:6﴾
وَقَالُوۡا مَالِ هٰذَا الرَّسُوۡلِ يَاۡكُلُ الطَّعَامَ وَيَمۡشِىۡ فِى الۡاَسۡوَاقِ ؕ لَوۡلَاۤ اُنۡزِلَ اِلَيۡهِ مَلَكٌ فَيَكُوۡنَ مَعَهٗ نَذِيۡرًا ۙ
﴿25:7﴾
اَوۡ يُلۡقٰٓى اِلَيۡهِ كَنۡزٌ اَوۡ تَكُوۡنُ لَهٗ جَنَّةٌ يَّاۡكُلُ مِنۡهَا ؕ وَقَالَ الظّٰلِمُوۡنَ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا رَجُلًا مَّسۡحُوۡرًا
﴿25:8﴾
اُنْظُرۡ كَيۡفَ ضَرَبُوۡا لَـكَ الۡاَمۡثَالَ فَضَلُّوۡا فَلَا يَسۡتَطِيۡعُوۡنَ سَبِيۡلاً
﴿25:9﴾
25:1 பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக!
25:2 அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான்.
25:3 ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!
25:4 எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்.
25:5 மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.”
25:6 (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”
25:7 மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக!
25:8 அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!”
25:9 பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.
| |