|
قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَۙ ﴿23:1﴾
الَّذِيۡنَ هُمۡ فِىۡ صَلَاتِهِمۡ خَاشِعُوۡنَ ۙ ﴿23:2﴾
وَالَّذِيۡنَ هُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَۙ ﴿23:3﴾
وَالَّذِيۡنَ هُمۡ لِلزَّكٰوةِ فَاعِلُوۡنَۙ ﴿23:4﴾
وَالَّذِيۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَۙ ﴿23:5﴾
اِلَّا عَلٰٓى اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَيۡرُ مَلُوۡمِيۡنَۚ
﴿23:6﴾
فَمَنِ ابۡتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓـئِكَ هُمُ الۡعٰدُوۡنَ ۚ
﴿23:7﴾
وَالَّذِيۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَاعُوۡنَ ۙ
﴿23:8﴾
وَالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَوٰتِهِمۡ يُحَافِظُوۡنَۘ
﴿23:9﴾
اُولٰٓـئِكَ هُمُ الۡوَارِثُوۡنَ ۙ ﴿23:10﴾
الَّذِيۡنَ يَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَؕ هُمۡ فِيۡهَا خٰلِدُوۡنَ
﴿23:11﴾
وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ سُلٰلَةٍ مِّنۡ طِيۡنٍ ۚ
﴿23:12﴾
ثُمَّ جَعَلۡنٰهُ نُطۡفَةً فِىۡ قَرَارٍ مَّكِيۡنٍ
﴿23:13﴾
ثُمَّ خَلَقۡنَا النُّطۡفَةَ عَلَقَةً فَخَلَقۡنَا الۡعَلَقَةَ مُضۡغَةً فَخَلَقۡنَا الۡمُضۡغَةَ عِظٰمًا فَكَسَوۡنَا الۡعِظٰمَ لَحۡمًا ثُمَّ اَنۡشَاۡنٰهُ خَلۡقًا اٰخَرَ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحۡسَنُ الۡخٰلِقِيۡنَ ؕ
﴿23:14﴾
ثُمَّ اِنَّكُمۡ بَعۡدَ ذٰلِكَ لَمَيِّتُوۡنَؕ ﴿23:15﴾
ثُمَّ اِنَّكُمۡ يَوۡمَ الۡقِيٰمَةِ تُبۡعَثُوۡنَ ﴿23:16﴾
وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ ۖ وَمَا كُنَّا عَنِ الۡخَـلۡقِ غٰفِلِيۡنَ
﴿23:17﴾
وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسۡكَنّٰهُ فِى الۡاَرۡضِۖ وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوۡنَ ۚ
﴿23:18﴾
فَاَنۡشَاۡنَا لَـكُمۡ بِهٖ جَنّٰتٍ مِّنۡ نَّخِيۡلٍ وَّ اَعۡنَابٍ ۘ لَـكُمۡ فِيۡهَا فَوَاكِهُ كَثِيۡرَةٌ وَّمِنۡهَا تَاۡكُلُوۡنَ ۙ
﴿23:19﴾
وَشَجَرَةً تَخۡرُجُ مِنۡ طُوۡرِ سَيۡنَآءَ تَنۡۢبُتُ بِالدُّهۡنِ وَصِبۡغٍ لِّلۡاٰكِلِيۡنَ
﴿23:20﴾
وَ اِنَّ لَـكُمۡ فِى الۡاَنۡعَامِ لَعِبۡرَةً ؕ نُسۡقِيۡكُمۡ مِّمَّا فِىۡ بُطُوۡنِهَا وَلَـكُمۡ فِيۡهَا مَنَافِعُ كَثِيۡرَةٌ وَّمِنۡهَا تَاۡكُلُوۡنَ ۙ
﴿23:21﴾
وَعَلَيۡهَا وَعَلَى الۡـفُلۡكِ تُحۡمَلُوۡنَ ﴿23:22﴾
23:1 திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
23:2 அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;
23:3 மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்;
23:4 இன்னும் ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயல்படுத்தக் கூடியவராய் இருக்கின்றார்கள்.
23:5 மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்;
23:6 தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்.
23:7 ஆயினும், எவர்கள் இதற்கப்பாலும் ஆசைப்படுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்களாவர்.
23:8 இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள்.
23:9 மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணுபவராய் இருக்கின்றார்கள்.
23:10 இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர்.
23:11 இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.
23:12 மனிதனை நாம் களி மண்ணின் சத்திலிருந்து படைத்தோம்.
23:13 பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம்.
23:14 பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்!
23:15 பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்!
23:16 பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள்.
23:17 திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம். மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை.
23:18 இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.
23:19 மேலும், அதன் மூலம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக நாம் உருவாக்கினோம். இத்தோட்டங்களில் (சுவை மிகுந்த) ஏராளமான கனிகள் உங்களுக்கு இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உணவைப் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
23:20 மேலும், ‘தூர் ஸைனா’ வளர்கின்ற மரத்தையும் நாம் படைத்தோம். எண்ணெய்யுடனும் உண்ணுகின்றவர்களுக்குக் குழம்புடனும் அது முளைக்கின்றது.
23:21 திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள்.
23:22 அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றீர்கள்.
| |