|
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوۡا رَبَّكُمۡۚ اِنَّ زَلۡزَلَةَ السَّاعَةِ شَىۡءٌ عَظِيۡمٌ
﴿22:1﴾
يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّاۤ اَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمۡ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيۡدٌ
﴿22:2﴾
وَمِنَ النَّاسِ مَنۡ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيۡرِ عِلۡمٍ وَّيَـتَّبِعُ كُلَّ شَيۡطٰنٍ مَّرِيۡدٍ ۙ
﴿22:3﴾
كُتِبَ عَلَيۡهِ اَنَّهٗ مَنۡ تَوَلَّاهُ فَاَنَّهٗ يُضِلُّهٗ وَيَهۡدِيۡهِ اِلٰى عَذَابِ السَّعِيۡرِ
﴿22:4﴾
يٰۤـاَيُّهَا النَّاسُ اِنۡ كُنۡـتُمۡ فِىۡ رَيۡبٍ مِّنَ الۡبَـعۡثِ فَاِنَّـا خَلَقۡنٰكُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّـطۡفَةٍ ثُمَّ مِنۡ عَلَقَةٍ ثُمَّ مِنۡ مُّضۡغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيۡرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمۡ ؕ وَنُقِرُّ فِى الۡاَرۡحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلًا ثُمَّ لِتَبۡلُغُوۡۤا اَشُدَّكُمۡ ۚ وَمِنۡكُمۡ مَّنۡ يُّتَوَفّٰى وَمِنۡكُمۡ مَّنۡ يُّرَدُّ اِلٰٓى اَرۡذَلِ الۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۡۢ بَعۡدِ عِلۡمٍ شَيۡـئًـا ؕ وَتَرَى الۡاَرۡضَ هَامِدَةً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَيۡهَا الۡمَآءَ اهۡتَزَّتۡ وَرَبَتۡ وَاَنۡۢبَـتَتۡ مِنۡ كُلِّ زَوۡجٍۢ بَهِيۡجٍ
﴿22:5﴾
ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الۡحَـقُّ وَاَنَّهٗ يُحۡىِ الۡمَوۡتٰى وَاَنَّهٗ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ ۙ
﴿22:6﴾
وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيۡبَ فِيۡهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبۡعَثُ مَنۡ فِى الۡقُبُوۡرِ
﴿22:7﴾
وَمِنَ النَّاسِ مَنۡ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيۡرِ عِلۡمٍ وَّلَا هُدًى وَلَا كِتٰبٍ مُّنِيۡرٍ ۙ
﴿22:8﴾
ثَانِىَ عِطۡفِهٖ لِيُضِلَّ عَنۡ سَبِيۡلِ اللّٰهِ ؕ لَهٗ فِى الدُّنۡيَا خِزۡىٌ وَّنُذِيۡقُهٗ يَوۡمَ الۡقِيٰمَةِ عَذَابَ الۡحَرِيۡقِ
﴿22:9﴾
ذٰ لِكَ بِمَا قَدَّمَتۡ يَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَـيۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِيۡدِ
﴿22:10﴾
22:1 மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்!
22:2 அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்துவிடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பமும் வீழ்ந்துவிடும். மேலும், மக்கள் மயக்கமுற்றவர்களாய் உமக்குத் தென்படுவார்கள். உண்மையில் அவர்கள் மயக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை அந்த அளவுக்குக் கடுமையாய் இருக்கும்.
22:3 மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கின்றார்கள்: அவர்கள் ஞானமில்லாமல் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றார்கள்.
22:4 ஆனால், அந்த ஷைத்தானுடைய விதியில் எழுதப்பட்டுள்ளது என்ன? அவனுடன் யாரேனும் நட்பு கொண்டால் அவர்களை அவன் திண்ணமாக, வழிகெடுத்து விடுவான். நரக வேதனையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுவான்.
22:5 மனிதர்களே! மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; நாம் உங்களை மண்ணிலிருந்து பிறகு இந்திரியத்திலிருந்து பிறகு இரத்தக்கட்டியிலிருந்து பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகத்தான் (இவற்றை நாம் எடுத்துரைக்கின்றோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு, உங்களைக் குழந்தை வடிவில் வெளிக்கொணர்கின்றோம்; (பிறகு உங்களை வளர்க்கின்றோம்;) நீங்கள் வாலிபத்தை அடைவதற்காக! மேலும், உங்களில் சிலர் முன்னரே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். வேறு சிலர் மிக மோசமான வயோதிகத்தின் பக்கம் திருப்பப்படுகின்றார்கள்; யாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாத நிலையை அடைவதற்காக! இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்: பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது.
22:6 இவையனைத்திற்கும் காரணம் இதுதான்: திண்ணமாக, அல்லாஹ்தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
22:7 இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான்.
22:8 மக்களில் வேறு சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஞானமோ, வழிகாட்டுதலோ, ஒளியூட்டும் வேதமோ எதுவுமின்றி பிடரியை நிமிர்த்திக் கொண்டு அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் புரிகின்றார்கள்.
22:9 மக்களை இறைவழியிலிருந்து பிறழச் செய்ய வேண்டும் என்பதற்காக! இத்தகையவர்களுக்கு உலகில் இழிவுதான் இருக்கிறது. மேலும், மறுமையில் அவர்களை நாம் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.
22:10 இதுதான் உன்னுடைய கைகள் உனக்காக தயார்செய்து வைத்துள்ள எதிர்காலம். தவிர அல்லாஹ் தன்னுடைய அடிமைகள் மீது அக்கிரமம் இழைப்பவன் அல்லன்.
| |