|
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِىۡ غَفۡلَةٍ مُّعۡرِضُوۡنَۚ
﴿21:1﴾
مَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ ذِكۡرٍ مِّنۡ رَّبِّہِمۡ مُّحۡدَثٍ اِلَّا اسۡتَمَعُوۡهُ وَهُمۡ يَلۡعَبُوۡنَۙ
﴿21:2﴾
لَاهِيَةً قُلُوۡبُهُمۡ ؕ وَاَسَرُّوا النَّجۡوَىۖ الَّذِيۡنَ ظَلَمُوۡا ۖ هَلۡ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُكُمۡ ۚ اَفَتَاۡتُوۡنَ السِّحۡرَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ
﴿21:3﴾
قٰلَ رَبِّىۡ يَعۡلَمُ الۡقَوۡلَ فِى السَّمَآءِ وَالۡاَرۡضِ وَهُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ
﴿21:4﴾
بَلۡ قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍۢ بَلِ افۡتَـرٰٮهُ بَلۡ هُوَ شَاعِرٌ ۖۚ فَلۡيَاۡتِنَا بِاٰيَةٍ كَمَاۤ اُرۡسِلَ الۡاَوَّلُوۡنَ
﴿21:5﴾
مَاۤ اٰمَنَتۡ قَبۡلَهُمۡ مِّنۡ قَرۡيَةٍ اَهۡلَـكۡنٰهَاۚ اَفَهُمۡ يُؤۡمِنُوۡنَ
﴿21:6﴾
وَمَاۤ اَرۡسَلۡنَا قَبۡلَكَ اِلَّا رِجَالًا نُّوۡحِىۡۤ اِلَيۡهِمۡ فَسۡـئَلُوۡۤا اَهۡلَ الذِّكۡرِ اِنۡ كُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
﴿21:7﴾
وَمَا جَعَلۡنٰهُمۡ جَسَدًا لَّا يَاۡكُلُوۡنَ الطَّعَامَ وَمَا كَانُوۡا خٰلِدِيۡنَ
﴿21:8﴾
ثُمَّ صَدَقۡنٰهُمُ الۡوَعۡدَ فَاَنۡجَيۡنٰهُمۡ وَمَنۡ نَّشَآءُ وَاَهۡلَكۡنَا الۡمُسۡرِفِيۡنَ
﴿21:9﴾
لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَيۡكُمۡ كِتٰبًا فِيۡهِ ذِكۡرُكُمۡؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
﴿21:10﴾
21:1 நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
21:2 அவர்களுடைய இறைனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
21:3 அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?”
21:4 அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.”
21:5 அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!”
21:6 உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா?
21:7 மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
21:8 அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை.
21:9 பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.
21:10 (மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா?
| |