|
كٓهٰيٰـعٓـصٓ ۚ ﴿19:1﴾
ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَـبۡدَهٗ زَكَرِيَّا ۖ ۚ
﴿19:2﴾
اِذۡ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا ﴿19:3﴾
قَالَ رَبِّ اِنِّىۡ وَهَنَ الۡعَظۡمُ مِنِّىۡ وَاشۡتَعَلَ الرَّاۡسُ شَيۡبًا وَّلَمۡ اَكُنۡۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّا
﴿19:4﴾
وَاِنِّىۡ خِفۡتُ الۡمَوَالِىَ مِنۡ وَّرَآءِىۡ وَكَانَتِ امۡرَاَتِىۡ عَاقِرًا فَهَبۡ لِىۡ مِنۡ لَّدُنۡكَ وَلِيًّا ۙ
﴿19:5﴾
يَّرِثُنِىۡ وَيَرِثُ مِنۡ اٰلِ يَعۡقُوۡبَ ۖ وَاجۡعَلۡهُ رَبِّ رَضِيًّا
﴿19:6﴾
يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰم اۨسۡمُهٗ يَحۡيٰى ۙ لَمۡ نَجۡعَلْ لَّهٗ مِنۡ قَبۡلُ سَمِيًّا
﴿19:7﴾
قَالَ رَبِّ اَنّٰى يَكُوۡنُ لِىۡ غُلٰمٌ وَّكَانَتِ امۡرَاَتِىۡ عَاقِرًا وَّقَدۡ بَلَـغۡتُ مِنَ الۡـكِبَرِ عِتِيًّا
﴿19:8﴾
قَالَ كَذٰلِكَۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدۡ خَلَقۡتُكَ مِنۡ قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡـئًـا
﴿19:9﴾
قَالَ رَبِّ اجۡعَلْ لِّىۡۤ اٰيَةً ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا
﴿19:10﴾
فَخَرَجَ عَلٰى قَوۡمِهٖ مِنَ الۡمِحۡرَابِ فَاَوۡحٰٓى اِلَيۡهِمۡ اَنۡ سَبِّحُوۡا بُكۡرَةً وَّعَشِيًّا
﴿19:11﴾
يٰيَحۡيٰى خُذِ الۡكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَيۡنٰهُ الۡحُكۡمَ صَبِيًّا ۙ
﴿19:12﴾
وَّحَنَانًـا مِّنۡ لَّدُنَّا وَزَكٰوةً ؕ وَّكَانَ تَقِيًّا ۙ
﴿19:13﴾
وَّبَرًّۢا بِوَالِدَيۡهِ وَلَمۡ يَكُنۡ جَبَّارًا عَصِيًّا
﴿19:14﴾
وَسَلٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوۡتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيًّا
﴿19:15﴾
19:1 காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
19:2 உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.
19:3 அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது!
19:4 அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை.
19:5 எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!
19:6 அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!”
19:7 (பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.”
19:8 அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”
19:9 பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!”
19:10 அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான்.
19:11 பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார்.
19:12 “யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம்.
19:13 மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம்.
19:14 அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை.
19:15 அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!
| |