|
وَيَدۡعُ الۡاِنۡسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالۡخَيۡرِ ؕ وَكَانَ الۡاِنۡسَانُ عَجُوۡلًا
﴿17:11﴾
وَجَعَلۡنَا الَّيۡلَ وَالنَّهَارَ اٰيَتَيۡنِ فَمَحَوۡنَاۤ اٰيَةَ الَّيۡلِ وَجَعَلۡنَاۤ اٰيَةَ النَّهَارِ مُبۡصِرَةً لِّتَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّكُمۡ وَلِتَعۡلَمُوۡا عَدَدَ السِّنِيۡنَ وَالۡحِسَابَؕ وَكُلَّ شَىۡءٍ فَصَّلۡنٰهُ تَفۡصِيۡلًا
﴿17:12﴾
وَكُلَّ اِنۡسَانٍ اَلۡزَمۡنٰهُ طٰۤـئِرَهٗ فِىۡ عُنُقِهٖؕ وَنُخۡرِجُ لَهٗ يَوۡمَ الۡقِيٰمَةِ كِتٰبًا يَّلۡقٰٮهُ مَنۡشُوۡرًا
﴿17:13﴾
اِقۡرَاۡ كِتٰبَك َؕ كَفٰى بِنَفۡسِكَ الۡيَوۡمَ عَلَيۡكَ حَسِيۡبًا ؕ
﴿17:14﴾
مَنِ اهۡتَدٰى فَاِنَّمَا يَهۡتَدِىۡ لِنَفۡسِهٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيۡهَا ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرٰى ؕ وَمَا كُنَّا مُعَذِّبِيۡنَ حَتّٰى نَبۡعَثَ رَسُوۡلًا
﴿17:15﴾
وَاِذَاۤ اَرَدۡنَاۤ اَنۡ نُّهۡلِكَ قَرۡيَةً اَمَرۡنَا مُتۡرَفِيۡهَا فَفَسَقُوۡا فِيۡهَا فَحَقَّ عَلَيۡهَا الۡقَوۡلُ فَدَمَّرۡنٰهَا تَدۡمِيۡرًا
﴿17:16﴾
وَكَمۡ اَهۡلَكۡنَا مِنَ الۡقُرُوۡنِ مِنۡۢ بَعۡدِ نُوۡحٍؕ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوۡبِ عِبَادِهٖ خَبِيۡرًۢا بَصِيۡرًا
﴿17:17﴾
مَنۡ كَانَ يُرِيۡدُ الۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهٗ فِيۡهَا مَا نَشَآءُ لِمَنۡ نُّرِيۡدُ ثُمَّ جَعَلۡنَا لَهٗ جَهَنَّمَۚ يَصۡلٰٮهَا مَذۡمُوۡمًا مَّدۡحُوۡرًا
﴿17:18﴾
وَمَنۡ اَرَادَ الۡاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعۡيَهَا وَهُوَ مُؤۡمِنٌ فَاُولٰۤـئِكَ كَانَ سَعۡيُهُمۡ مَّشۡكُوۡرًا
﴿17:19﴾
كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنۡ عَطَآءِ رَبِّكَ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحۡظُوۡرًا
﴿17:20﴾
اُنْظُرۡ كَيۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلٰى بَعۡضٍ ؕ وَلَـلۡاٰخِرَةُ اَكۡبَرُ دَرَجٰتٍ وَّاَكۡبَرُ تَفۡضِيۡلًا
﴿17:21﴾
لَا تَجۡعَلۡ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقۡعُدَ مَذۡمُوۡمًا مَّخۡذُوۡلًا
﴿17:22﴾
17:11 நன்மையை எவ்வாறு கோர வேண்டுமோ அவ்வாறு தீமையை மனிதன் கோருகின்றான். மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:12 (பாருங்கள்) நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகளாய் அமைத்துள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாய் ஆக்கினோம். பகல் எனும் சான்றினை ஒளிரக்கூடியதாய்ச் செய்தோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனின் அருட் கொடையைத் தேட வேண்டும்; மேலும், மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இவ்வாறு ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக நாம் வகைப்படுத்தி வைத்துள்ளோம்.
17:13 மேலும், ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும் மறுமைநாளில், ஒரு வினைச் சுவடியை அவனுக்காக வெளிப் படுத்துவோம். அதனை அவன் ஒரு திறந்த புத்தகத்தைப் போன்று காண்பான்.
17:14 “படித்துப்பார், உன்னுடைய இந்த வினைப்பட்டியலை! இன்று உன்னுடைய கணக்கைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!”
17:15 ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறிதவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். மேலும் (சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்திட) ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் யாரையும் தண்டிப்பவர் அல்லர்!
17:16 நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அவர்கள் அங்கு (இக்கட்டளைக்கு) மாறு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்பட்டு விடுகின்றது. ஆகவே, அதனை நாம் அழித்தொழித்து விடுகின்றோம்.
17:17 (பாருங்கள்!) நூஹுக்குப் பிறகு வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர் நம் கட்டளைக்கேற்ப அழிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் அடிமைகளின் பாவச் செயல்கள் குறித்து உம் இறைவன் நன்கறிந்தே இருக்கின்றான். மேலும் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
17:18 விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில், அவனுக்கு இங்கேயே நாம் அதனைக் கொடுத்துவிடுகிறோம் நாம் நாடுகின்றவற்றை நாம் நாடுபவர்க்கு மட்டும்! பிறகு, நாம் அவனுடைய பங்கில் நரகத்தை எழுதிவிடுகின்றோம். சபிக்கப்பட்டவனாகவும் இறையருளை இழந்தவனாகவும் அவன் அதில் கிடந்து எரிவான்.
17:19 மேலும், இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், யார் மறுமையை விரும்புகின்றாரோ அதற்காகப் பாடுபடுகின்ற முறைப்படி பாடுபடுகின்றாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும்.
17:20 (இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக இரு சாரார்க்கும் (உலகில்) நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக்கொண்டிருக்கிறோம். இது உம் இறைவனின் கொடையாகும். மேலும், உம் இறைவனின் கொடையைத் தடுக்கக் கூடியவர் யாருமில்லை.
17:21 ஆயினும், (இம்மையிலேயே) அவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம் என்பதைப் பாருங்கள். மேலும், மறுமையிலோ அவர்களுக்கு இன்னும் அதிக அந்தஸ்து உண்டு; பெரும் சிறப்பும் கிடைக்கும்.
17:22 அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்!
| |