|
سُبۡحٰنَ الَّذِىۡۤ اَسۡرٰى بِعَبۡدِهٖ لَيۡلًا مِّنَ الۡمَسۡجِدِ الۡحَـرَامِ اِلَى الۡمَسۡجِدِ الۡاَقۡصَا الَّذِىۡ بٰرَكۡنَا حَوۡلَهٗ لِنُرِيَهٗ مِنۡ اٰيٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِيۡعُ الۡبَصِيۡرُ
﴿17:1﴾
وَاٰتَيۡنَا مُوۡسَى الۡـكِتٰبَ وَ جَعَلۡنٰهُ هُدًى لِّبَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ اَلَّا تَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِىۡ وَكِيۡلًا ؕ
﴿17:2﴾
ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍؕ اِنَّهٗ كَانَ عَبۡدًا شَكُوۡرًا
﴿17:3﴾
وَقَضَيۡنَاۤ اِلٰى بَنِىۡۤ اِسۡرَاۤءِيۡلَ فِى الۡكِتٰبِ لَـتُفۡسِدُنَّ فِى الۡاَرۡضِ مَرَّتَيۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوًّا كَبِيۡرًا
﴿17:4﴾
فَاِذَا جَآءَ وَعۡدُ اُوۡلٰٮهُمَا بَعَثۡنَا عَلَيۡكُمۡ عِبَادًا لَّنَاۤ اُولِىۡ بَاۡسٍ شَدِيۡدٍ فَجَاسُوۡا خِلٰلَ الدِّيَارِ ؕ وَكَانَ وَعۡدًا مَّفۡعُوۡلًا
﴿17:5﴾
ثُمَّ رَدَدۡنَا لَـكُمُ الۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَاَمۡدَدۡنٰـكُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِيۡنَ وَجَعَلۡنٰكُمۡ اَكۡثَرَ نَفِيۡرًا
﴿17:6﴾
اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِكُمۡوَاِنۡ اَسَاۡتُمۡ فَلَهَا ؕ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَةِ لِيَسُـوْۤءا وُجُوۡهَكُمۡ وَلِيَدۡخُلُوا الۡمَسۡجِدَ كَمَا دَخَلُوۡهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِيُتَبِّرُوۡا مَا عَلَوۡا تَتۡبِيۡرًا
﴿17:7﴾
عَسٰى رَبُّكُمۡ اَنۡ يَّرۡحَمَكُمۡ ۚ وَاِنۡ عُدْتُّمۡ عُدۡنَاۘ وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكٰفِرِيۡنَ حَصِيۡرًا
﴿17:8﴾
اِنَّ هٰذَا الۡقُرۡاٰنَ يَهۡدِىۡ لِلَّتِىۡ هِىَ اَقۡوَمُ وَ يُبَشِّرُ الۡمُؤۡمِنِيۡنَ الَّذِيۡنَ يَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمۡ اَجۡرًا كَبِيۡرًا ۙ
﴿17:9﴾
وَّاَنَّ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَةِ اَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا اَلِيۡمًا
﴿17:10﴾
17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
17:2 (இதற்கு முன்பு) நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். மேலும், அதனை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டக் கூடியதாக அமைத்தோம்; “நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் உங்களின் பொறுப்பாளனாய் ஆக்கிக்கொள்ளக்கூடாது” எனும் அறிவுறுத்தலுடன்!
17:3 நீங்கள் நூஹுடன் கப்பலில் நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகத் திகழ்ந்தார்.
17:4 பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம்.
17:5 இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது.
17:6 இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம்.
17:7 பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
17:8 இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்.
17:9 உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது.
17:10 ஆனால், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறது.
| |