|
اَتٰۤى اَمۡرُ اللّٰهِ فَلَا تَسۡتَعۡجِلُوۡهُ ؕ سُبۡحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشۡرِكُوۡنَ
﴿16:1﴾
يُنَزِّلُ الۡمَلٰۤـئِكَةَ بِالرُّوۡحِ مِنۡ اَمۡرِهٖ عَلٰى مَنۡ يَّشَآءُ مِنۡ عِبَادِهٖۤ اَنۡ اَنۡذِرُوۡۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوۡنِ
﴿16:2﴾
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَـقِّؕ تَعٰلٰى عَمَّا يُشۡرِكُوۡنَ
﴿16:3﴾
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ نُّـطۡفَةٍ فَاِذَا هُوَ خَصِيۡمٌ مُّبِيۡنٌ
﴿16:4﴾
وَالۡاَنۡعَامَ خَلَقَهَا ۚ لَـكُمۡ فِيۡهَا دِفۡ ٴٌ وَّمَنَافِعُ وَمِنۡهَا تَاۡكُلُوۡنَ
﴿16:5﴾
وَلَكُمۡ فِيۡهَا جَمَالٌ حِيۡنَ تُرِيۡحُوۡنَ وَحِيۡنَ تَسۡرَحُوۡنَ
﴿16:6﴾
وَتَحۡمِلُ اَثۡقَالَـكُمۡ اِلٰى بَلَدٍ لَّمۡ تَكُوۡنُوۡا بٰلِغِيۡهِ اِلَّا بِشِقِّ الۡاَنۡفُسِؕ اِنَّ رَبَّكُمۡ لَرَءُوۡفٌ رَّحِيۡمٌۙ
﴿16:7﴾
وَّالۡخَـيۡلَ وَالۡبِغَالَ وَالۡحَمِيۡرَ لِتَرۡكَبُوۡهَا وَزِيۡنَةً ؕ وَيَخۡلُقُ مَا لَا تَعۡلَمُوۡنَ
﴿16:8﴾
وَعَلَى اللّٰهِ قَصۡدُ السَّبِيۡلِ وَمِنۡهَا جَآئِرٌؕ وَلَوۡ شَآءَ لَهَدٰٮكُمۡ اَجۡمَعِيۡنَ
﴿16:9﴾
16:1 வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை! எனவே, அதற்காக நீங்கள் அவசரப்படாதீர்கள்! இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் தூய்மையானவனும், உயர்ந்தவனும் ஆவான்.
16:2 அவன் இந்த ரூஹை* வானவர்களின் மூலம், தனது கட்டளையினால் தான் விரும்பும் அடியார்கள் மீது இறக்கி வைக்கின்றான்; (இந்த ஏவுரையுடன் மக்களை) எச்சரிக்கை செய்யுங்கள்: ‘நிச்சயமாக, வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!’
16:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கின்றான். இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் மிகவும் மேலானவன்.
16:4 அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்! இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகி விட்டான்.
16:5 மேலும், அவன் கால்நடைகளையும் படைத்தான்! அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது; உணவும் இருக்கிறது; இன்னும் பல பயன்களும் இருக்கின்றன.
16:6 மேலும், மாலை நேரத்தில் அவற்றை நீங்கள் ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் போதும் அவை உங்களுக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.
16:7 மேலும், மிகவும் சிரமப்பட்டே தவிர உங்களால் அடைய இயலாத இடங்களுக்கெல்லாம் அவை உங்கள் சுமைகளைச் சுமந்து செல்கின்றன. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும் கருணையும் உடையவனாயிருக்கின்றான்.
16:8 மேலும், குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் ஆகியவற்றையும் அவன் படைத்தான்; அவற்றின் மீது நீங்கள் பயணம் செய்ய வேண்டும்; மேலும், அவை உங்கள் வாழ்க்கையின் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதற்காக! இன்னும் நீங்கள் அறிந்தேயிராத பலவற்றை (உங்கள் நன்மைக்காக) அவன் படைக்கின்றான்.
16:9 மேலும், கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில், நேரிய வழியினைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டியிருப்பான்.
| |