|
الۤرٰ تِلۡكَ اٰيٰتُ الۡـكِتٰبِ وَقُرۡاٰنٍ مُّبِيۡنٍ
﴿15:1﴾
رُبَمَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ كَانُوۡا مُسۡلِمِيۡنَ
﴿15:2﴾
ذَرۡهُمۡ يَاۡكُلُوۡا وَيَتَمَتَّعُوۡا وَيُلۡهِهِمُ الۡاَمَلُ فَسَوۡفَ يَعۡلَمُوۡنَ
﴿15:3﴾
وَمَاۤ اَهۡلَـكۡنَا مِنۡ قَرۡيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعۡلُوۡمٌ
﴿15:4﴾
مَا تَسۡبِقُ مِنۡ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسۡتَاْخِرُوۡنَ
﴿15:5﴾
وَ قَالُوۡا يٰۤاَيُّهَا الَّذِىۡ نُزِّلَ عَلَيۡهِ الذِّكۡرُ اِنَّكَ لَمَجۡنُوۡنٌؕ
﴿15:6﴾
لَوۡ مَا تَاۡتِيۡنَا بِالۡمَلٰۤـئِكَةِ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِيۡنَ
﴿15:7﴾
مَا نُنَزِّلُ الۡمَلٰۤـئِكَةَ اِلَّا بِالۡحَـقِّ وَمَا كَانُوۡۤا اِذًا مُّنۡظَرِيۡنَ
﴿15:8﴾
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّكۡرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوۡنَ
﴿15:9﴾
وَلَـقَدۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ فِىۡ شِيَعِ الۡاَوَّلِيۡنَ
﴿15:10﴾
وَمَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ
﴿15:11﴾
كَذٰلِكَ نَسۡلُكُهٗ فِىۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِيۡنَۙ
﴿15:12﴾
لَا يُؤۡمِنُوۡنَ بِهٖۚ وَقَدۡ خَلَتۡ سُنَّةُ الۡاَوَّلِيۡنَ
﴿15:13﴾
وَلَوۡ فَتَحۡنَا عَلَيۡهِمۡ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوۡا فِيۡهِ يَعۡرُجُوۡنَۙ
﴿15:14﴾
لَـقَالُوۡۤا اِنَّمَا سُكِّرَتۡ اَبۡصَارُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٌ مَّسۡحُوۡرُوۡنَ
﴿15:15﴾
15:1 அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை.
15:2 (இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும்.
15:3 (நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்;
15:4 இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது.
15:5 எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது.
15:6 இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர்.
15:7 நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?”
15:8 நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை.
15:9 திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
15:10 (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
15:11 அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை.
15:12 இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம்.
15:13 அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது.
15:14 மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும்
15:15 அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!”
| |