|
الۤرٰ كِتٰبٌ اَنۡزَلۡنٰهُ اِلَيۡكَ لِـتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ ۙ بِاِذۡنِ رَبِّهِمۡ اِلٰى صِرَاطِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ
﴿14:1﴾
اللّٰهِ الَّذِىۡ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِؕ وَوَيۡلٌ لِّـلۡكٰفِرِيۡنَ مِنۡ عَذَابٍ شَدِيۡدِ ۙ
﴿14:2﴾
اۨلَّذِيۡنَ يَسۡتَحِبُّوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا عَلَى الۡاٰخِرَةِ وَيَصُدُّوۡنَ عَنۡ سَبِيۡلِ اللّٰهِ وَيَبۡغُوۡنَهَا عِوَجًا ؕ اُولٰۤـئِكَ فِىۡ ضَلٰلٍۢ بَعِيۡدٍ
﴿14:3﴾
وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِهٖ لِيُبَيِّنَ لَهُمۡؕ فَيُضِلُّ اللّٰهُ مَنۡ يَّشَآءُ وَيَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ ؕ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ
﴿14:4﴾
وَلَـقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰى بِاٰيٰتِنَاۤ اَنۡ اَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ ۙ وَذَكِّرۡهُمۡ بِاَيّٰٮمِ اللّٰهِؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوۡرٍ
﴿14:5﴾
وَاِذۡ قَالَ مُوۡسٰى لِـقَوۡمِهِ اذۡكُرُوۡا نِعۡمَةَ اللّٰهِ عَلَيۡكُمۡ اِذۡ اَنۡجٰٮكُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ يَسُوۡمُوۡنَـكُمۡ سُوۡۤءَ الۡعَذَابِ وَ يُذَبِّحُوۡنَ اَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُوۡنَ نِسَآءَكُمۡ ؕ وَفِىۡ ذٰ لِكُمۡ بَلَاۤ ءٌ مِّنۡ رَّبِّكُمۡ عَظِيۡمٌ
﴿14:6﴾
14:1 அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய
14:2 மேலும், வானங்கள் பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக). சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அழிவைத் தரும் கடும் தண்டனை இருக்கிறது;
14:3 அவர்கள் எத்தகையவர்களெனில் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுக்கிறார்கள். அவ்வழி (தங்கள் விருப்பப்படி) கோணலாகிவிட வேண்டும் என்று நாடுகிறார்கள். இத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார்கள்.
14:4 தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
14:5 (இதற்கு முன்பு) மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன.
14:6 மூஸா தம்முடைய சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: “அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள பேருதவிகளை நினைத்துப் பாருங்கள்! உங்களுக்குக் கடுமையான துன்பம் இழைத்துக் கொண்டும், உங்கள் ஆண்மக்களைக் கொலை செய்து கொண்டும், உங்கள் பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து அவன் உங்களை விடுவித்தான்! இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
| |