|
الٓرٰ كِتٰبٌ اُحۡكِمَتۡ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتۡ مِنۡ لَّدُنۡ حَكِيۡمٍ خَبِيۡرٍۙ
﴿11:1﴾
اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّا اللّٰهَ ؕ اِنَّنِىۡ لَـكُمۡ مِّنۡهُ نَذِيۡرٌ وَّبَشِيۡرٌ ۙ
﴿11:2﴾
وَّاَنِ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَيۡهِ يُمَتِّعۡكُمۡ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤۡتِ كُلَّ ذِىۡ فَضۡلٍ فَضۡلَهٗ ؕ وَاِنۡ تَوَلَّوۡا فَاِنِّىۡۤ اَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ كَبِيۡرٍ
﴿11:3﴾
اِلَى اللّٰهِ مَرۡجِعُكُمۡۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ
﴿11:4﴾
اَلَاۤ اِنَّهُمۡ يَثۡنُوۡنَ صُدُوۡرَهُمۡ لِيَسۡتَخۡفُوۡا مِنۡهُؕ اَلَا حِيۡنَ يَسۡتَغۡشُوۡنَ ثِيَابَهُمۡۙ يَعۡلَمُ مَا يُسِرُّوۡنَ وَمَا يُعۡلِنُوۡنَۚ اِنَّهٗ عَلِيۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ
﴿11:5﴾
وَمَا مِنۡ دَآ بَّةٍ فِى الۡاَرۡضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزۡقُهَا وَ يَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاؕ كُلٌّ فِىۡ كِتٰبٍ مُّبِيۡنٍ
﴿11:6﴾
وَ هُوَ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرۡشُهٗ عَلَى الۡمَآءِ لِيَبۡلُوَكُمۡ اَيُّكُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَلَـئِنۡ قُلۡتَ اِنَّكُمۡ مَّبۡعُوۡثُوۡنَ مِنۡۢ بَعۡدِ الۡمَوۡتِ لَيَـقُوۡلَنَّ الَّذِيۡنَ كَفَرُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِيۡنٌ
﴿11:7﴾
وَلَـئِنۡ اَخَّرۡنَا عَنۡهُمُ الۡعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعۡدُوۡدَةٍ لَّيَـقُوۡلُنَّ مَا يَحۡبِسُهٗؕ اَلَا يَوۡمَ يَاۡتِيۡهِمۡ لَـيۡسَ مَصۡرُوۡفًا عَنۡهُمۡ وَحَاقَ بِهِمۡ مَّا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ
﴿11:8﴾
11:1 அலிஃப், லாம், றா. வேதக் கட்டளையாகும் இது. அனைத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இதனுடைய வசனங்கள் உறுதியான முறையிலும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
11:2 (அந்தக் கட்டளை இதுதான்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!’ திண்ணமாக, நான் அவன் சார்பில் உங்களை எச்சரிக்கை செய்பவனாகவும் உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன்.
11:3 மேலும், நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும், சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணிப்பீர்களேயானால், திகிலூட்டக்கூடிய ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
11:4 அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிவரவேண்டியுள்ளது. மேலும், அவன் அனைத்தையும் செய்வதற்கு ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
11:5 பாருங்கள்! அவருடைய பார்வையை விட்டு மறைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் தங்களுடைய நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்களின் இரகசியங்களையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கின்றான்.
11:6 உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
11:7 அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.”
11:8 ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்!
| |