قُلۡ يٰۤاَيُّهَا الۡكٰفِرُوۡنَۙ ﴿109:1﴾
لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَۙ ﴿109:2﴾
وَلَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ ﴿109:3﴾
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡۙ ﴿109:4﴾
وَ لَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ ﴿109:5﴾
لَـكُمۡ دِيۡنُكُمۡ وَلِىَ دِيۡنِ ﴿109:6﴾
109:1 கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே!
109:2 நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை.
109:3 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:4 மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
109:5 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர்.
109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
|