اَرَءَيۡتَ الَّذِىۡ يُكَذِّبُ بِالدِّيۡنِؕ ﴿107:1﴾
فَذٰلِكَ الَّذِىۡ يَدُعُّ الۡيَتِيۡمَۙ ﴿107:2﴾
وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِؕ ﴿107:3﴾
فَوَيۡلٌ لِّلۡمُصَلِّيۡنَۙ ﴿107:4﴾
الَّذِيۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَۙ ﴿107:5﴾
الَّذِيۡنَ هُمۡ يُرَآءُوۡنَۙ ﴿107:6﴾
وَيَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ﴿107:7﴾
107:1 மறுமையில் நற்கூலி தண்டனை கொடுக் கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா?
107:2 அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான்.
107:3 மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை.
107:4 மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு!
107:5 அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள்
107:6 அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
107:7 மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.
|