اَلۡهٰٮكُمُ التَّكَاثُرُۙ ﴿102:1﴾
حَتّٰى زُرۡتُمُ الۡمَقَابِرَؕ ﴿102:2﴾
كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَۙ ﴿102:3﴾
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَؕ ﴿102:4﴾
كَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡيَقِيۡنِؕ ﴿102:5﴾
لَتَرَوُنَّ الۡجَحِيۡمَۙ ﴿102:6﴾
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ الۡيَقِيۡنِۙ ﴿102:7﴾
ثُمَّ لَـتُسۡـئَـلُنَّ يَوۡمَـئِذٍ عَنِ النَّعِيۡمِ
﴿102:8﴾
102:1 பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
102:2 நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
102:3 அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
102:4 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
102:5 (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது).
102:6 திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
102:7 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
102:8 பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள்.
|