|
اَلۡقَارِعَةُ ۙ ﴿101:1﴾
مَا الۡقَارِعَةُ ۚ ﴿101:2﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡقَارِعَةُ ؕ ﴿101:3﴾
يَوۡمَ يَكُوۡنُ النَّاسُ كَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِۙ
﴿101:4﴾
وَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِ الۡمَنۡفُوۡشِؕ ﴿101:5﴾
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِيۡنُهٗ ۙ ﴿101:6﴾
فَهُوَ فِىۡ عِيۡشَةٍ رَّاضِيَةٍ ؕ ﴿101:7﴾
وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِيۡنُهٗ ۙ ﴿101:8﴾
فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ ﴿101:9﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا هِيَهۡ ؕ ﴿101:10﴾
نَارٌ حَامِيَةٌ ﴿101:11﴾
101:1 பயங்கரமான நிகழ்ச்சி!
101:2 அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன?
101:3 அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
101:4 அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும்
101:5 மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்!
101:6 பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ
101:7 அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார்.
101:8 மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ
101:9 அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!
101:10 அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
101:11 கொழுந்து விட்டெரியும் நெருப்பு!
| |