|
الٓر تِلۡكَ اٰيٰتُ الۡكِتٰبِ الۡحَكِيۡمِ ﴿10:1﴾
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنۡ اَوۡحَيۡنَاۤ اِلٰى رَجُلٍ مِّنۡهُمۡ اَنۡ اَنۡذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَنَّ لَهُمۡ قَدَمَ صِدۡقٍ عِنۡدَ رَبِّهِمۡؕ قَالَ الۡكٰفِرُوۡنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيۡنٌ
﴿10:2﴾
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ يُدَبِّرُ الۡاَمۡرَؕ مَا مِنۡ شَفِيۡعٍ اِلَّا مِنۡۢ بَعۡدِ اِذۡنِهٖ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمۡ فَاعۡبُدُوۡهُ ؕ اَفَلَا تَذَكَّرُوۡنَ
﴿10:3﴾
اِلَيۡهِ مَرۡجِعُكُمۡ جَمِيۡعًا ؕ وَعۡدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ يَـبۡدَؤُا الۡخَـلۡقَ ثُمَّ يُعِيۡدُهٗ لِيَجۡزِىَ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالۡقِسۡطِؕ وَالَّذِيۡنَ كَفَرُوۡا لَهُمۡ شَرَابٌ مِّنۡ حَمِيۡمٍ وَّعَذَابٌ اَلِيۡمٌۢ بِمَا كَانُوۡا يَكۡفُرُوۡنَ
﴿10:4﴾
هُوَ الَّذِىۡ جَعَلَ الشَّمۡسَ ضِيَآءً وَّالۡقَمَرَ نُوۡرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعۡلَمُوۡا عَدَدَ السِّنِيۡنَ وَالۡحِسَابَؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالۡحَـقِّۚ يُفَصِّلُ الۡاٰيٰتِ لِقَوۡمٍ يَّعۡلَمُوۡنَ
﴿10:5﴾
اِنَّ فِى اخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰيٰتٍ لِّـقَوۡمٍ يَّتَّقُوۡنَ
﴿10:6﴾
اِنَّ الَّذِيۡنَ لَا يَرۡجُوۡنَ لِقَآءَنَا وَرَضُوۡا بِالۡحَيٰوةِ الدُّنۡيَا وَاطۡمَاَنُّوۡا بِهَا وَالَّذِيۡنَ هُمۡ عَنۡ اٰيٰتِنَا غٰفِلُوۡنَۙ
﴿10:7﴾
اُولٰٓـئِكَ مَاۡوٰٮهُمُ النَّارُ بِمَا كَانُوۡا يَكۡسِبُوۡنَ
﴿10:8﴾
اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ يَهۡدِيۡهِمۡ رَبُّهُمۡ بِاِيۡمَانِهِمۡۚ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهِمُ الۡاَنۡهٰرُ فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِ
﴿10:9﴾
دَعۡوٰٮهُمۡ فِيۡهَا سُبۡحٰنَكَ اللّٰهُمَّ وَ تَحِيَّـتُهُمۡ فِيۡهَا سَلٰمٌۚ وَاٰخِرُ دَعۡوٰٮهُمۡ اَنِ الۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ
﴿10:10﴾
10:1 அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
10:2 (அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள்.
10:3 உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
10:4 நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள்.
10:5 அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.
10:6 திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
10:7 உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ
10:8 அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும்.
10:9 ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;
10:10 “இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும்.
| |