Author
MOULANA SYED JALALUDDIN UMARI – மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி
-
-
இந்திய சூழலும் முஸ்லிம்களும்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய அழைப்புப் பணி
இஸ்லாமிய அழைப்புப் பணி எனும் இந்நூல் நான்கு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளது.முதல் தலைப்பில் தூதுத்துவத்தின் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இறைத்தூதர்கள் இவ்வுலகில் வருகை தந்ததற்கான காரணங்களும் அவர்கள் செய்த பெரும் சமூகப் புரட்சிகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதில், இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆற்றிய மாபெரும் செயல்பாடுகள் எத்தகு சீர்திருத்தங்களை ஏற்படுத்தினஎன்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது தலைப்பு நேரடியாக இஸ்லாமிய பரப்புரை தொடர்பான கருத்துக்களை விவாதிக்கிறது. அதில் முதலாவதாக அப்பணியின் சரியான அந்தஸ்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிறகு இஸ்லாத்தைப் பின்பற்றுவதைப் பற்றி வலுவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பிறகு பரப்புரையின் செயல்திட்டம் அதன் அடிப்படை ஒழுக்கங்கள் அதன் வெற்றி தோல்விகள் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியில் இறை மார்க்கம் ஏன் யாரால் நிராகரிக்கப்படுகிறது, அம்மார்க்கத்தைப் பெற்றுக் கொள்வோர் யார் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மூன்றாவது தலைப்பில் மனிதனை அந்த அழைப்புப் பணிக்கு ஏற்றவாறு தயார் செய்யக்கூடிய அம்சங்கள் பற்றியும் அப்பணியாற்றுவோரிடம் அவசியம் இருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.நான்காவது இறுதித் தலைப்பு அழைப்புப் பணி, அதனை நிர்வகிப்பது தொடர்பான தகவல்களைத் திரட்டித்தருகிறது. மேலும் இஸ்லாமிய கட்டமைப்பை வலுவாக்கக்கூடிய அம்சங்கள் பற்றியும் எவ்வகையில் அது மதிப்பானதாக அமையும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.நூலாசிரியர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ இந்நூலில் நுட்பமான கல்வி, ஆய்வு அடிப்படையில் பேசவில்லை மாறாக கருத்துக்களை மிக எளிமையாகவும் எளிய நடையிலும் முன் வைக்க முயன்றுள்ளார்.Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: -
இஸ்லாம் மனித உரிமைகளின் காவலன்
‘எல்லா மக்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் படைத்தவன் உயிர் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்க-முடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்-ளான் எனும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன.’ என்பதாக ஐக்கிய அமெரிக்க விடுதலைக்-கான அறிக்கை – 1776 குறிப்பிடுகிறது. வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை, சமய உரிமை, சமத்துவ உரிமை, கல்வி உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இப்படியாக பல்வேறுபட்ட உரிமைகள் இருந்தாலும் மனித உரிமைகள், * வாழ்வுரிமை * அரசியல் உரிமை * பொருளாதார உரிமை * சமூக உரிமை * கலாச்சார உரிமை என ஐந்தில் அடங்கிவிடும். இப்படியான மானுட உரிமைகள் பற்றிப்பேசும் பெரும் நூல்களுக்கான ஒரு வழிகாட்டி நூலாக இந்த நூல் திகழ்கிறது.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெண்களும் இஸ்லாமும்
இன்று பள்ளிவாசல்களில் பிரிக்கமுடியாத பகுதிகளாக இருப்பவை டெல்லி மேடைகளே. இவற்றுக்கு பின்புலமாக இருந்தவர் ஒரு பெண்மணியே,
இஸ்லாமிய வரலாற்றில் படைத்ததில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் பங்கேற்கும் இருந்தன என்பதற்கான அழகிய சான்றுகளாக இன்று உலகமெங்கும் பள்ளிவாசல்களில் இருக்கின்ற வெள்ளிமேடைகள் ஜொலிக்கின்றன.
இவற்றைப் போன்ற ஏராளமான சான்றுகளையும், இறைவணக்கம், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம் என வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னோடி முஸ்லிம் பெண்கள் விட்டுச்சென்ற அழியாத சுவடுகளை படம்பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் இந்நூல். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விரிவாக விவரிக்கின்ற நூல் இந்நூல்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மக்கள் சேவை
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
Author: Moulana Syed Jalaludeen Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹240 -
மத்ஹபுகள் சர்ச்சைகள் தேவையா?
விவாதத்திற்குரிய பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவார்ந்த ரீதியிலும் கொள்கைப் பூர்வமாகவும்மௌலானா அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பிரச்னையோடு தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதியுடன் ஆற அமர அதைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று நம்புகின்றோம்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -