-
திருக்குர்ஆனில் மறுமை
தென்னகத்து இஸ்லாமியப் பேரறிஞர்களில் தலைசிறந்தவரான கேரளாவைச் சேர்ந்த K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் எழுதிய ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் மலையாள நூலின் தமிழாக்கம்தான் இந்நூல். மூதறிஞர் K.C. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர், பன்னூலாசிரியர். இஸ்லாமிய இயக்கத்தின் குறிப்பிடத்தக்கத் தலைவர்களில் ஒருவர். ஏராளமான செயல் வீரர்களை உருவாக்கியவர். அவர் எழுதிய ‘அல்லாஹ் குர்ஆனில்’, ‘நபிமார்கள் குர்ஆனில்’ எனும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் நூலை அவர் ஒரு மாறுபட்ட கோணத்தில் எழுதியுள்ளார்.
இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டை உறுதியாக நம்பும் முஸ்லிம்கள் அது பற்றிய செய்திகளைக் குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் குறைந்த அளவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனினும், இந்த நூலில் மறுமை நிகழ்வுக் காட்சிகளை குர்ஆன்-ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மௌலவி அவர்கள். ஒவ்வொரு செய்திக்கான வசனங்களையும் தந்துவிட்டு அதை, நாம் உரையாடும் பாணியில் வித்தியாசமாக விவரிக்கிறார். கூடவே, இறைத்தூதரின் சொற்களைச் சரியான முறையில் அங்கு பொருத்திவிடுகிறார்.
உலக அழிவு, மறுமை என்னும் நிகழ்வுகளைத் திருக்குர்ஆனில் சீரான வரிசைப்படி பார்க்க இயலாது. மௌலானா அந்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, மறுமையை நோக்கிய ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் மறுமையை நம்பியிருக்கும் உள்ளங்களுக்கு அது மேலும் உறுதியைத் தருகிறது. நம்பாதவர்களுக்கோ, நம்பிக்கைக்கான வாசலைத் திறந்து விடுகிறது.Author: K.C. ABDULLAH MOULAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -