-
மகிழ்ச்சியின் தருணம் (குழந்தைகளுக்கான சிறுகதைகள்)
குழந்தைகள் குதூகலித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்ற நோக்கில் 15 தலைப்புகளில் ‘மகிழ்ச்சியின் தருணம்’ (குழந்தைகளுக்கான சிறுகதைகள்) என்கிற இந்நூலை எழுதிய இர்ஃபான் ஹாபிஸ் வலியுடன் கூடிய மகிழ்ச்சியையே தன் வாழ்நாளில் சுகித்திருக்கிறார். பன்னிரண்டு வயதிலிருந்து உடலை அசைக்க முடியா நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் தனது உலகமே தனித்துவமானது என்று நிறைவு கண்டு மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடே இந்நூல்.
Author: Irfan Hafiz
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மௌனச் சிந்தனைகள் (Silent Thoughts)
வாழ்க்கை தந்த பாடங்களைத் தனது மௌன மனதின் அடிநாளத்திலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார். அவருடைய பெற்றோரின் வாழ்க்கை கற்றுத் தந்தவற்றையும் அதன் மூலம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதையும் வாழ்க்கையை எந்த முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நூலாசிரியர் உயிரோடு இல்லையென்றாலும் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து மறைந்திருக்கிறார். மாற்றுத் திறனாளியாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவராக அதுவும் அபூர்வமான நோயால் Duchenne Muscular Dystrophy (DMD) பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் சில ஆண்டுகளே வாழ்வார் என்று அறிவிக்கப்பட்டு அதையும் மீறி இறைவன் கொடுத்த வாய்ப்பு வரை சுமார் 26 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். படுக்கையில் படுத்த வண்ணம் தன்னிடமிருந்த வலிமையைப் பயன்படுத்தி ஒரு விரலால் ஐபோனில் தட்டச்சு செய்து புத்தகங்களைப் படைத்திருக்கிறார்; இர்பான் ஹாபிஸ் மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவை :
1. Silent Struggle
2. Moments Of Merriment (Stories of children)
3. Silent Thoughts மௌனச் சிந்தனைகள் என்ற இப்புத்தகம்.Author: Irfan Hafiz
Publisher: ISLAMIC FOUNDATION TRUST