-
இறை நினைவு (திக்ர்) – أذكار
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒருபால் உறவு – ஆய்வும் ஆலோசனையும்
Dr. J. Mohideen, DR. K.V.S. HABEEB MOHAMMED - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், MOULAVI NOOH MAHLARI, V.S. MOHAMMED AMEENஅதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)
ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆனியக் கலைகள்
திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.
திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
Author: DR. J. MOHIDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு
ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Review:
https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share
Author: Dr. J. Mohideen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST